sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

என்ன மாறினாலும் எண்ணம் மாறலாமா

/

என்ன மாறினாலும் எண்ணம் மாறலாமா

என்ன மாறினாலும் எண்ணம் மாறலாமா

என்ன மாறினாலும் எண்ணம் மாறலாமா


ADDED : மார் 09, 2018 12:00 PM

Google News

ADDED : மார் 09, 2018 12:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்' என ஒவ்வொருவரும் எல்லையை நிர்ணயித்து கொள்கிறோம்.

நிர்ணயிப்பது முக்கியமல்ல. கடைசி மூச்சு வரை அதை கடைபிடிப்பதே முக்கியம்.

'இதெல்லாம் நடக்கிற காரியமா' என்று கேட்பவர்கள் வாயடைக்க ஒருவர் இருக்கிறார்.அவர்தான் பீஷ்மர்! தன் தந்தையின் விருப்பத்திற்காக பிரம்மச்சரிய விரதம் ஏற்ற உத்தமபுத்திரன்.

தம்பி விசித்திர வீரியனுக்காக, காசிராஜனின் மூன்று மகள்களை கடத்தி வந்தார். அதில் அம்பை என்பவள், சாலுவதேசத்து மன்னரான பிரம்மதத்தனை விரும்புவதாக சொன்னதும், மறுபேச்சு பேசாமல் அனுப்பி வைத்தார்.

'மாற்றானால் கடத்தப்பட்டவள்' என்று அவளை பிரம்மதத்தன் ஏற்க மறுத்தான். பீஷ்மரிடம் திரும்பியவள், 'என்னை நீங்கள் தான் மணக்க வேண்டும்' என வேண்டினாள். 'நான் பிரம்மச்சாரி' என பீஷ்மர் மறுத்து விட்டார்.

உடனே அவள் பீஷ்மரின் குரு, பரசுராமரிடம் முறையிட்டாள். 'அம்பையை மணந்து கொள்' என பீஷ்மருக்கு உத்தரவிட்டார் பரசுராமர். தன் குருவின் வார்த்தையையும் மறுத்தார். கோபம் கொண்டு போரிட்ட பரசுராமரையும் வென்றார். கொள்கைக்காக எண்ணத்தை மாற்றாத துணிவு வேண்டும். அதுவே பீஷ்மருக்கு நிகராக ஒருவரை உயர்த்தும்.






      Dinamalar
      Follow us