sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கனவில் பிறந்த உத்தரவு!

/

கனவில் பிறந்த உத்தரவு!

கனவில் பிறந்த உத்தரவு!

கனவில் பிறந்த உத்தரவு!


ADDED : ஜூலை 02, 2014 04:09 PM

Google News

ADDED : ஜூலை 02, 2014 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கர மடத்திற்குச் சொந்தமான வீடு ஒன்று, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் அருகில் இருக்கிறது. ஒருசமயம், வரதராஜருக்கு திருவிழா நடந்தபோது, பெரியவர் அந்த வீட்டில் தங்கியிருந்தார். மிக முக்கிய விழாவான கருடசேவையன்று, பெருந்திரளாக பக்தர்கள் கூடுவர். அப்போது வெளியூரில் இருந்து வருவோருக்கு சித்ரான்னங்கள் வழங்கினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பெரியவருக்குத் தோன்றியது.

மடத்தின் ஸ்ரீகார்யத்தை(திருப்பணி செய்பவர்) அழைத்து, ''கருடசேவை தரிசனம் பண்ண வெளியூர் பக்தர் நிறைய வருவா! அவாளுக்கு ஏதானும் சித்ரான்னம் செய்து விநியோகம் பண்ணா நன்னாயிருக்கும். குறைஞ்சது 20 ஆயிரம் பொட்டலத்திற்கு ஏற்பாடு செய்யணும்!'' என்றார்.

ஸ்ரீகார்யம் உணவு தயாரிப்பதில் இருக்கும் சிரமத்தை எல்லாம் எடுத்துச் சொன்னார். உ<டனடியாக வேலையாட்கள், இடம் எல்லாம் தேடிப்பிடிக்க முடியாது என்று தயங்கினார். இதைக் கேட்ட பெரியவர், 'சரி பார்க்கலாம்' என்று சொல்லி மவுனமாகி விட்டார்.

கருடசேவையன்று, சென்னையைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர், காலை 11.00 மணிக்கு காஞ்சிப்பெரியவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சாம்பார்சாதம் என சித்ரான்னம் கட்டிய பொட்டலங்கள் பார்சலாக அவர் வசம் இருந்தது. இது கண்ட ஸ்ரீகார்யத்திற்கு மனதில் ஒரே ஆச்சரியம்!

அந்த பணக்காரரிடம், ''நீங்கள் எதற்காக இந்த பொட்டலங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் ?'' என்று கேட்டார். அவரோ, ''காஞ்சிப்பெரியவா கனவில வந்து, இது மாதிரி கொண்டு வரச்சொல்லி உத்தரவு போட்டார்'' என்று விளக்கம் அளித்தார்.

கனவில் அவர் சொன்னபடியே, தான் சென்னையில் இருந்து சமையல் கலைஞர்களை காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்ததாகவும், காஞ்சிபுரம் காந்தி ரோட்டிலுள்ள, லட்சுமி டாக்கீஸ் மைதானத்தில் சமையல் ஏற்பாடுகளைச் செய்து உணவுகளைத் தயார் செய்ததாகவும், வரதராஜர் கருடசேவையில் தரிசிக்கும் பக்தர்களுக்கு அதை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

''காஞ்சிப் பெரியவரின் தெய்வீகத் தன்மையை எடுத்துரைக்க வார்த்தைகள் ஏதுமில்லை '' என சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் வியந்தார்.






      Dinamalar
      Follow us