தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சரியா தப்பா.... சரியா தப்பா..

சரியா தப்பா.... சரியா தப்பா..

சரியா தப்பா.... சரியா தப்பா..


ADDED : நவ 19, 2012 12:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2012 12:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தமாக பேச முடியாத ஒரு இளைஞன், மந்திர தீட்சை பெறுவதற்காக வித்வான் ஒருவரை அணுகினான். அவர் எளிய மந்திரமான 'ஸ்ரீகிருஷ்ணாய நம:'' என சொல்லச் சொன்னார்.

அவன் இருகைகளையும் குவித்தபடி, 'ஸ்ரீ திருஷ்ணாயநம:' என்று உச்சரித்தான். மீண்டும் மீண்டும் சொன்னபோதும் சரியான உச்சரிப்பு வரவில்லை. ''உனக்குச் சொல்லித் தர நான் ஆள் இல்லையப்பா. இங்கிருந்து கிளம்பிவிடு,'' என்று கோபத்தில் கத்தினார் வித்வான். அந்நேரத்தில் வித்வானின் நண்பர் அங்கு வந்தார்.

அவர் வித்வானிடம்,''ஏன் கத்துகிறீர்! அவன் சொன்னதில் ஒன்றும் தவறில்லையே! 'ஸ்ரீ திருஷ்ணாய நம:' என்பதும் அந்த பகவானையே குறிக்கும். 'ஸ்ரீ' என்றால் லட்சுமி, 'திருஷ்ணா' என்றால் 'அன்பு கொண்டவன்' என்பது பொருள். திருமகளிடம் அன்பு கொண்டவனும் பகவான் கிருஷ்ணன் தானே!'' என்று விளக்கமளித்தார். இளைஞன் சந்தோஷம் அடைந்தான். அவனுக்கு கிருஷ்ணர் மீது மேலும் பக்தி உண்டானது. இரவும் பகலும் ஜெபித்து சிறந்த பக்தனாக மாறினான்.

இந்த கதையின் மூலம், இறைவனின் நாமத்தை தவறாகச் சொன்னாலும் பரவாயில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. இயலாமை, அறியாமை போன்ற காரணத்தால் இறை நாமத்தைத் தவறாகச் சொன்னால், அந்த மந்திரத்திற்குள் பக்தி புதைந்து கிடந்தால், கடவுள் ஏற்றுக் கொண்டு அருள்புரிவார் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us