ADDED : மார் 10, 2017 12:51 PM

அனுமன் இலங்கையை தீக்கிரையாக்கி விட்டு சென்ற பின், ராவணன், தன் தம்பி விபீஷணனுடன் பேசினான்.
விபீஷணன் அவனிடம், ''ராமர் நமது ராஜ்யத்தை அழிக்கும் முன்பு, சீதையை ராமரிடம் திருப்பி அனுப்பி விடுவதே நலம்,'' என்றார். இதைக் கேட்டு ராவணன் கோபமடைந்து அவனை விரட்டினான்.
விபீஷணன் அவனிடம், ''நான் உன் நலனை உத்தேசித்து பேசிய பேச்சு உனக்கு பிடிக்கவில்லை. 'வினாச காலே விபரீத புத்தி' என்பார்கள். அழிவு ஒருவனை நெருங்கும் போது, அவனது அறிவு வேலை செய்வதில்லை,'' என்று கூறி வெளியேறினான். ராமரை சரண் அடைந்தான்.
ராமர் அவனை தன்னுடன் சேர்த்துக் கொள்வது குறித்து சுக்ரீவனுடன் ஆலோசனை செய்தபோது, அவர் விபீஷணரை சேர்க்கக் கூடாது என்றார். ஆனால் ராமரோ, இந்த ராட்சதன் துஷ்டனாகவே இருந்தாலும், நம்மைச் சரணடைந்து விட்டான். அடைக்கலம் கேட்டு வந்தவனை, பாதுகாக்க தவறுவது மகாபாவம்,'' என்றார்.
- எம்.விக்னேஷ்