sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (14)

/

ஷிர்டி பாபா (14)

ஷிர்டி பாபா (14)

ஷிர்டி பாபா (14)


ADDED : மார் 25, 2014 12:47 PM

Google News

ADDED : மார் 25, 2014 12:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்...அந்த சமயத்தில், ஷிர்டி மசூதியில் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தவர்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.

திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றார். ஏன் இவர் இப்படி ஆவேசப்படுகிறார் என்று பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபா தன் கைகளையும், கால்களையும் யாரோடோ சண்டையிடுவதுபோல் காற்றில் வீசத் தொடங்கினார். எதன் பொருட்டு இது நடக்கிறது?

பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாபா உக்கிரத்தோடு காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்திருந்தன. முகம் குங்குமப் பூப்போல் சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.

திருடர்கள் முன் பயத்தோடு நின்றுகொண்டிருந்த காஷிராமின் உடலில் ஒரு கணம் ஆவேசம் வந்தது போல் தோன்றியது. தன் கையில் பற்றிக் கொண்டிருந்த பையை இன்னும் இறுகப் பிடித்துக் கொண்டார்.

தன் கைகளாலும், கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார். அவரோ அதிக பலமில்லாத நோஞ்சான். ஒரே ஒருவர் தான் அவர். திருடர்கள் பலசாலிகள். அவர்கள் எண்ணிக்கையில் நான்கைந்து பேர்! ஆனால், காஷிராமின் உடலில் தென்பட்ட அசாத்தியமான வலிமையைப் பார்த்துத் திருடர்கள் விக்கித்துப் போனார்கள். கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்

அங்கேயே போட்டுவிட்டு தப்பித்தால் போதும் என்று ஓடலானார்கள்!

காஷிராம் விடுவதாக இல்லை. காற்றை விட வேகமாக ஓடி, அவர்கள் முன்னால் போய் மீண்டும் நின்றார். அவர்களை ஒரு கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு முக்கியமாக நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு மசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர் பிரமிப்போடும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் மசூதியில் நுழைந்து பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து சர்க்கரையை ஏற்குமாறு வேண்டினார். அப்போதுதான் பாபாவின் ஆவேசம் தணிந்தது.

''அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டாயல்லவா?'' என்று அமைதியாக, அவர் கேட்டபோதுதான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது.

பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார் அவர். தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எப்படியெல்லாம் ஓடோடி வருகிறார் என்றறிந்து நெக்குருகி நின்றார்கள் பக்தர்கள்.

அவரவரும் அவரவர் உடம்பை நன்கு பராமரிக்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பம். அடியவர்கள், தீய பழக்கங்கள் அற்றவர்களாய், நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் நலத்தைப் பேண வேண்டியது அவசியம் என்பதை பாபா அடிக்கடி அறிவுறுத்தினார். ''உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!'' என்ற திருமூலர் தத்துவமே, பாபாவின் உபதேசமாகவும் இருந்தது.

உடம்பைப் புறக்கணிக்கவும் வேண்டாம். கொஞ்சிக் கொஞ்சி செல்லமாகக் கொண்டாடவும் வேண்டாம். ஆனால், முறையாக அதைப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

உடல் என்கிற குதிரையில் தான் ஆன்மா சவாரி செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆன்மா சவாரி செய்யும் இந்த உடல் நலமாக இருக்க வேண்டியது அவசியம். குதிரையில் சவாரி செய்யும் பயணி, குதிரையின் நலனை

எவ்வளவு எச்சரிக்கையோடு பாதுகாப்பானோ, அதுபோல் நாமும் உடலைக் காக்க வேண்டும்.

கடவுளை அடைதல் என்ற உயர்ந்த லட்சியத்தை சாத்தியப்படுத்தவே உடல் அருளப்பட்டுள்ளது. ஆன்ம ஞானம் பெறுவதற்கு உடலின் ஆரோக்கியம் முக்கியமானது. பாபா, உடலை வருத்திக் கொண்டு பக்தி செய்யுமாறு கூறியதில்லை. அன்பர்களைத் தாயன்போடு நேசித்த அவர், அவர்களது உடல் நலனிலும் தாய்மைக் கனிவோடு அக்கறை செலுத்தினார். அதுமட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருப்பதை அறிந்து, ஜீவகாருண்யத்தோடு வாழவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஷிர்டியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். ஒருமுறை, அவர் மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். கரண்டியால் ரசத்தை அவர் கலக்கிக் கொண்டிருந்தபோது, பசியுள்ள ஒரு நாய் விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய் பசியால்தான் குரைக்கிறது என்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார். காய்ந்த ரொட்டித் துண்டைப் பரிவோடு நாயின் முன் வீசினார்.

வாலைக் குழைத்து ஓடி வந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை மொறுமொறுவென உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்தது. ஷிர்டி பாபாவின் கண்கள் ஒளியால் மின்னுவதைப் போல் அதன் கண்களும் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன.

நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவைப் பார்ப்பதற்காக மசூதிக்குச் சென்றார். தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.

''அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள். இப்படியே தொடர்ந்து நடப்பாயாக. என் பசிக்கு உணவிட மறந்துவிடாதே!'' தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவே இல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம் கேட்டாள்:

''சுவாமி! நான் இன்று உங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே?''

''நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்துபோனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான்தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?

பசிக்கும் ஜீவன் எதற்கு உணவளித்தாலும், அது என்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது!''

இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். எங்கும் நிறை ஞானப் பிரம்மத்தின் முன் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டார்.

ஷிர்டியில் 'நானாவலி' என்கிற பாபா பக்தன் இருந்தான். பாபாவுக்கான தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வான் அவன். திடீரென்று ஒருநாள் பக்தர்கள் கூடியிருக்கும் சந்தர்ப்பத்தில் நேரே பாபாவிடம் வந்தான்.

''இப்போது உங்கள் ஆசனத்தில் நான் அமரவேண்டும். உடனே எழுந்திருங்கள்!'' என்று பாபாவை அதட்டினான்! பக்தர்கள்

திகைப்போடு பாபாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்....

அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us