sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லடி அபிராமி (24) - சக்திமிக்க சக்தி வழிபாடு

/

சொல்லடி அபிராமி (24) - சக்திமிக்க சக்தி வழிபாடு

சொல்லடி அபிராமி (24) - சக்திமிக்க சக்தி வழிபாடு

சொல்லடி அபிராமி (24) - சக்திமிக்க சக்தி வழிபாடு


ADDED : அக் 20, 2016 11:56 AM

Google News

ADDED : அக் 20, 2016 11:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டரது சொற்பொழிவின் தொடர்ச்சி இது தான்.

''வேதம் இரு தெய்வங்களைத்தான் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதில் ஒன்று 'துர்க்கா தேவீம் சரணமஹம் ப்ரபத்யே' என்று கூறும் துர்க்கா சூக்தம் ஆகும். மற்றொன்று ஸ்ரீசூக்தம் உரைக்கும், தாம் 'பத்மினீமீம் சரணம் அஹம் ப்ரபத்யே' என்ற வாக்கியங்கள் ஆகும். எனவே துர்க்கையாகிய பராசக்தியின் அருளும், திருமகளாகிய மகாலட்சுமியின் அருளும் பெற வேண்டுமெனில், பக்தர்களாகிய நாம் பூரண சரணாகதி அடைய வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

மகாலட்சுமிதான் 'ப்ரக்ருதி' என்றழைக்கப்படும் தேவியாவாள். 'ப்ர' என்றால் சிறந்தது. 'க்ருதி' என்றால் ஸ்ருஷ்டி என்று அர்த்தம். அதாவது அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவள் என்ற உண்மை விளங்குகின்றது. படைத்தல், காத்தல் நிகழ வேண்டுமாயின் அன்னை முக்குணம் கொண்டவளாய்த் திகழ வேண்டும். 'ப்ர' சத்வகுணம், 'க்ரு' ரஜோ குணம். 'தி' தமோ குணம். ப்ரக்ருதி என்றால் முக்குணம் கொண்ட மகாமாயை என்று

பொருளாகிறது. அவளைச் சரணடைந்தால் நாம் மாயையை வென்று பிரம்மத்தை அடையலாம். ஏனெனில் ஜீவர்களாகிய நாம் மாயையின்

வசப்பட்டவர்கள். ஈஸ்வரியாகிய தேவி மாயையைத் தன் வயத்தில் கட்டுப்படுத்தி வைத்திருப்பாள்.

பசு, பட்சிகள், பெண்கள், வேதபாராயணம் செய்யும் அந்தணர்கள் இவர்களுக்கு தீங்கு இழைப்போர், வேதங்கள், தெய்வங்களை நிந்தனை செய்வோர், சாஸ்திரங்களை இழித்துப் பேசுவோர், தரும நெறியினின்று பிறழ்ந்து நடப்போர், பெற்ற தாயை, கட்டிய மனைவியை, தான் ஈன்ற புத்திரியை கரம் நீட்டி அல்லது கால் எட்டி அடித்து துன்புறுத்தியோர், பொய்க் கணக்குக் காட்டித் தன் எஜமானனின் பொருளை அபகரித்தோர், நெய், சந்தனம், சங்கு, தங்கம், வாகனம் போன்றவற்றைத் திருடியோர், குரு, குருபத்தினி ஆகியோருக்கு துரோகம் இழைத்தோர், சக்தி வழிபாட்டை நிந்தனை செய்து வழிபடாமலிருப்போர், பொய்சாட்சி சொல்வோர், நீதி தவறி குற்றவாளியைக் காப்பாற்றுவோர், தண்ணீரைப் பழித்தோர், பிறர் உணவைத் தட்டிப் பறித்தோர், பொதுச் சொத்துகளை, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வோர், ஆலயங்களில் உள்ள பொருட்களை அபகரித்துச் செல்வோர் இவர்கள் யாவரும் தான் மறுபிறவியில் பசி, தாகம், நோய்நொடிகள், வறுமை, கடன், வழக்கு, ஏழ்மை, தரித்திரம் ஆகிய துன்பங்களால் உழல்கின்றவர்கள்.

இவ்வாறு துன்பப்படுவோரை உற்றார், நண்பர்கள், சுற்றத்தார் வெறுத்து ஒதுக்குவார்கள். அவர்கள் என்றும் கண்ணீரில் தத்தளித்து அல்ப ஆயுளில் மாண்டு, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பச் சூழலில் சிக்கித் தவிப்பர்.

பட்டர் தன் விளக்கத்தைச் சற்றே நிறுத்தி அவையோரை ஏறிட்டுப் பார்த்தார்.

அப்போது அன்பர் ஒருவர், “சுவாமி! அப்படியென்றால் ஏழ்மையிலிருந்து மீள வழியே இல்லையா?” என்று கேட்டார்

பட்டர் கூறினார். “கண்டிப்பாக உண்டு! கவலை வேண்டாம். சத்யன் என்ற ஒரு ஏழையின் கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.

முன்னொரு சமயம் சத்யன் என்ற பெயர் கொண்ட ஒரு நடுத்தர வயதினன் முன்வினை பயன் காரணமாக, பிறந்த நாள்முதல் வறுமையில் உழன்று வந்தான். கடன்காரர்கள் அவனை இழிவுபடுத்தி மிரட்டி வதைத்தனர். சிலசமயம் செய்யாத குற்றங்களுக்காக வீண்பழி சுமத்தப்பட்டு ராஜ தண்டனையும் அடைந்தான். அப்போதுதான் ஒருநாள் அதிகாலை நெற்றியில் புண்டரீகமும், அருள்ததும்பும் விழிகளும் கொண்ட தவசீலர் ஒருவர் தன்வழியே திருமாலின் திருநாமங்களை இசைத்தபடியே நடந்து செல்வதைக் கண்டான். ஓடோடிச் சென்ற சத்யன், அம்மகானின் கால்களில் வீழ்ந்து கதறினான்.

“சுவாமி! தங்கள் திருக்கோலம் சாட்சாத் அந்த பெருமாளையே தரிசிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. என் வறுமைப்பிணி தீர ஓர் உபாயம் சொல்வீராக!” என்று அழுதான்.

அம்மகான், “மகனே! நீ ஒருபோதும் ஏழையல்ல. உன்னைச் சுற்றிலும் எத்துணை செல்வங்கள் உனக்காகக் காத்து நிற்கின்றன என்று அறியாதவன் தான் நீ!” என்றார். அவர் கூறியதைக் கேட்ட சத்யன் அதிர்ந்து போனான்.

”என்ன அதிசயம்? என்னைச் சுற்றிலும் செல்வங்கள் காத்து நிற்கின்றனவா? நம்ப முடியவில்லையே” என்றான்.

மகனே! அச்செல்வங்களை அடைய உன் கைகளில் முதலீடு ஏதும் தேவையில்லை, முயற்சிதான் தேவை!'

'சுவாமி! அச்செல்வங்கள் தான் என்ன? அவை எங்கு உள்ளன?'

அறிவு சார்ந்த நூல்கள் தான் அச் செல்வங்கள், பகவத்கீதை, நாலாயிர திவ்ய பிரபந்தம். ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை, தேவிமகாத்மியம், பாகவதம், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள். லலிதா. லட்சுமி, விஷ்ணு சகஸ்ரநாமங்கள். . . இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்கள் உன்னைச் சுற்றி இருக்கின்றன. அவற்றைப் பெற, படிக்க பொருள் செலவு ஏதுமில்லை ... இதோ விஷ்ணு சகஸ்ரநாமம். இதை தினமும் பாராயணம் செய்து வா. அதனால் புண்ணியபலன் ஏற்பட்டு, முற்பிறவியின் பாப பலன்கள் நீங்கும். உன் வறுமை தீர்க்கும் மூலமந்திரத்தை நானே உனக்கு பின்னொரு நாளில் உபதேசிப்பேன்,” என்று விஷ்ணு சகஸ்ரநாம நூலினை அவன் கரங்களில் தந்து உபதேசமும் செய்து மறைந்தார் அந்த மகான். அன்று முதல் சத்யன் தினமும் காலையில் எழுந்து முதல் வேலையாக விஷ்ணு சகஸ்ரநாமத்தை உரத்த குரலில் படிக்கலானான். ஒருநாள் அண்டை வீட்டில் குடியிருந்த ஒரு மூதாட்டி, அவன் படிப்பதைக் கேட்டு அங்கு வந்தாள்.

அந்த அம்மையார், “மகனே! பகவானை நீ அவரது ஆயிரம் நாமங்களைச் சொல்லி அழைப்பது கேட்டு ஓடோடி வந்தேனப்பா, இதோ கொஞ்சம் வெண்பொங்கல் கொண்டு வந்துள்ளேன். அர்ச்சனை செய்யும் போது இதனை நைவேத்யம் செய்து விட்டு நீயும் சாப்பிடு . . .” என்று கூறி ஒரு பாத்திரத்தில் நிறைய வெண்பொங்கலைத் தந்து சென்றாள், அது மட்டுமின்றி நாள் தோறும். பழங்களும். புஷ்பங்களும் அவனைத் தேடி வரலாயின, அவனது பசிப்பிணி அவனை விட்டு அறவே அகன்று போனது.

சில காலம் கழித்து முன்பு வந்த அதே தவசீலர் சத்யனைத் தேடி வந்தார், அவரது கால்களில் வீழ்ந்து வணங்கிய சத்யன், பகவான் தன் பசிப்பிணி தீர்த்த கதையைக் கூறி மகிழ்ந்தான்.

அதைக் கேட்ட முனிவர், 'பிள்ளாய்! இன்னும் கூறுவேன் கேட்பாயாக. லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ஸ்ரீ சூக்த ஜெபம் செய்ய வேண்டும். கிழக்கு முகமாக அமர்ந்து தான் உணவு அருந்த வேண்டும். எல்லோரிடமும் பிரியமாகவும், பணிவாகவும் பேசிப்பழகு. வஸ்திரமின்றி ஸ்நானம் செய்யாதே! வில்வம், தும்பை, தாமரை, துளசி இவற்றை உதாசீனப்படுத்தாதே. தனியாக உப்பை நாவிலிடாதே, பூமியைக் கால்விரலால் கீறாதே, இவ்வாறு நீ நடந்து கொண்டால் மகாலட்சுமி உன்னிடம் என்றும் நித்யவாசம் செய்வாள்,” என்றார்.

அம்மன் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அதனை குருவின் மூலமாக கற்று அறிந்து, முறையாக உபதேசம் பெற்று செய்து வந்தால் எல்லா நன்மையும் அடையப் பெறலாம். அன்னையின் அருளுக்கு பாத்திரர் ஆகலாம். அந்த வகையில் 'அபிராமி அந்தாதி' சாக்தநெறி (சக்தி வழிபாடு) தழைக்க உலகோருக்கு கிடைத்த அருட்கொடையாகும்.

ஓம் சக்தி! சிவசக்தி!

- சுபம்

முனைவர் ஜெகநாத சுவாமி






      Dinamalar
      Follow us