sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 10

/

சரணம் ஐயப்பா - 10

சரணம் ஐயப்பா - 10

சரணம் ஐயப்பா - 10


ADDED : பிப் 06, 2022 04:08 PM

Google News

ADDED : பிப் 06, 2022 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாய் மீது சத்தியம்

“மணிகண்டா! நீ என் தலைமகன் என்ற முறையில் மன்னர் உனக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்திருக்கிறார். அது சரியான ஒன்றே! இருப்பினும், உன் தம்பி ராஜராஜனை நினைத்துப் பார். நீ அரசாளும் வரை அவனை நல்ல முறையில் கவனித்துக் கொள்வாய் என்பதை நான் நன்கறிவேன். ஆனால் வருங்காலத்தில் உனது பிள்ளைகள், அவனையும், அவனது பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. எனவே ராஜராஜனுக்கே பட்டம் சூட்ட வேண்டுமென நான் கருதுகிறேன். இப்படி சொல்வதால் என்னைத் தவறாக எண்ணாதே. உன் தம்பி மீது உனக்கு அதிக பாசமுண்டு. அவனுக்கு எதிர்காலத்தில் இப்படி ஒரு துன்பம் வருவதை நீயே பொறுப்பாயா! அதனால் உனக்கு அரசபதவி வேண்டாம். ராஜராஜனுக்கு விட்டுக் கொடுத்து விடு” என்றாள்.

மணிகண்டன் முகமலர்ச்சியுடன், “அம்மா! இதைச் சொல்ல நீங்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டுமா. ஒரு தாதியிடம் இந்த விஷயத்தை சொல்லி அனுப்பியிருந்தால் கூட அதை நான் ஏற்றிருப்பேன். என் தம்பி நாடாள்வதே முறையானது. இது விஷயத்தில் நீங்கள் அச்சமும், ஐயமும் கொள்ளத் தேவையில்லை” என்ற மணிகண்டனை பெருமிதம் பொங்கப் பார்த்தாள் ராணி. அவனது தியாக உணர்வு அவளது நெஞ்சைத் தொட்டது.

இருப்பினும் தனது இன்னொரு சந்தேகத்தையும் கேட்டாள்.

“மணிகண்டா! இது நீயும் நானும் எடுத்த முடிவு. மன்னர் இதற்கு சம்மதிக்க மறுத்தால்...” என இழுத்த போது, குறுக்கிட்ட மணிகண்டன், “அம்மா! அந்தக் கவலையும் தங்களுக்கு வேண்டாம். சொல்லுகிற விதத்தில் சொன்னால், மன்னர் நிச்சயம் சம்மதிப்பார். அவரிடம் சம்மதம் பெற வேண்டியது எனது பொறுப்பு,” என்றதும் ராணிக்கு ஓரளவு ஆறுதலாயிற்று.

ஒருவேளை மன்னர் இது விஷயத்தில் பிடிவாதமாக இருந்து விட்டால் என்னாவது என்ற சந்தேகம் மனதில் எழ, அதையும் மணிகண்டனிடம் கேட்டு விட்டாள். அப்போது அவன் சொன்ன பதில், ராணியை மட்டுமல்ல. நம் எல்லோரையுமே நெகிழவும், பெருமிதம் கொள்ளவும் செய்கிறது.

“அம்மா! ஒருவேளை அப்படி ஒரு நிலை வந்தால் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். என் ஆயுள் முடியும் வரை பிரம்மச்சாரியாகவே வாழ்வேன். இது சத்தியம்” என தாயின் உள்ளங்கையில் அடித்துச் சொன்னான்.

சத்தியம் செய்வதற்கு உள்ளங்கையை நம்மவர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் உண்டு. உள்ளங்கையில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் தான் காலையில் எழுந்ததும், உள்ளங்கையை உற்றுப் பார்க்கும் வழக்கம் பலரிடம் உண்டு. மகாலட்சுமி சாட்சியாக இந்த சத்தியத்தை செய்கிறேன் என்பது இதன் உள்ளர்த்தம். ஒருவேளை சத்தியம் தவறினால் மகாலட்சுமிக்குரிய செல்வம் சத்தியம் செய்தவரை விட்டு விலகி விடும். அவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாவார். இதனால் தான் உள்ளங்கையில் சத்தியம் செய்யும் பழக்கம் உண்டானது.

காஞ்சிப்பெரியவரிடம் சத்தியம் என்றால் என்ன என்று ஒரு பக்தர் கேட்டார்.

“மனமும் வாக்கும் ஒன்றாக இருப்பதே சத்தியம். மனதில் உள்ளதை வெளியிட்டு சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்கு பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனதில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நடந்து கொண்டால் அடுத்த ஜென்மத்தில் நமக்கு கொடுத்த பேசும் சக்தியைப் பறித்து விடுவார். அதாவது மிருக ஜென்மத்தையே தருவார். சத்தியம் என்றால் மனமும் வாக்கும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகிற நல்ல எண்ணங்களை வாக்கில் தருவதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்” என விளக்கமளித்தார் அவர்.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பாருங்கள்! தன் உடன்பிறவா தம்பியும், அவனது வம்சமும் நன்றாக இருக்க தர்ம சாஸ்தாவாகிய மணிகண்டன் எந்தளவு விட்டுக் கொடுத்திருக்கிறார். நாம் சொத்து சுகத்துக்காக சொந்த சகோதரர்கள் மீதே வழக்கு தொடுத்து, நீதிமன்ற வாசல்களில் காத்துக் கிடக்கிறோம். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டால்

உலகில் சகோதர பாசத்துக்கு அழிவென்பதே இருக்காது. மணிகண்டன் பிரம்ச்சரிய விரதம் இருப்பதாக சத்தியம் எடுத்ததும், மகாராணிக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு மந்திரியை வரவழைத்த அவள் மணிகண்டன் தன்னிடம் சத்தியம் செய்தது பற்றி எடுத்துரைத்தாள். மணிகண்டன் சொன்ன சொல் தவறாதவன் என்பதில் தனக்கு அதிக நம்பிக்கையுண்டு என்றாள். ஆனாலும் கொலை வெறி கொண்ட மந்திரியின் கோணல் புத்தி ராணியை மேலும் குழப்பியது.

அவன் ராணியிடம்,“உங்களுக்கு மணிகண்டன் சத்தியம் செய்து கொடுத்ததால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. ஒருவேளை மன்னர் இதையெல்லாம் ஏற்க மறுத்து விட்டால் இந்த சத்தியம் பலனற்றதாகி விடும். எனவே மணிகண்டனை தற்காலிகமாக இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.வாபரைக் கைது செய்யும் பணியில் அவனை ஈடுபடுத்தலாம் என்றால் மன்னர் அதற்கு மறுத்து விட்டார். எனவே நீங்கள் தான் இது விஷயத்தில் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்ற மந்திரியிடம்,“நான் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டாள் ராணி.

“மகாராணி! உங்களுக்கு தீராத தலைவலி வந்தது போல நடியுங்கள். மன்னர் மருத்துவர்களை வரவழைப்பார். அவர்களை நான் சரிக்கட்டி, இந்த நோய் தீர வேண்டுமானால், காட்டிலிருந்து புலிப்பால் கொண்டு வர வேண்டும். அதில் மூலிகை மருந்தைக் கரைத்து குடித்தால் தான் குணமாகும் என சொல்ல வைத்து விடுகிறேன். உங்களுக்கு ஒன்று என்றால், மன்னரும், மணிகண்டனும் தாங்க மாட்டார்கள். மன்னர் மணிகண்டனை காட்டுக்கு செல்ல அனுமதித்து விடுவார். புலியிடம் பால் கறப்பதென்பது இயலாத காரியம். இதற்கு மிக நீண்ட காலம் பிடிக்கும். இந்த இடைவெளியைப் பயன்படுத்தியும், மன்னரின் உடல்நிலையைக் காரணம் காட்டியும் ராஜராஜனுக்கு பட்டம் சூட்டும் பணியை நான் முடித்து விடுகிறேன்” என்றான் மந்திரி.

“அப்படியானால் ஒரு நிபந்தனை...” என ராணி சொல்ல, இவள் என்ன சொல்லப் போகிறாளோ, நமது திட்டம் பலிக்குமா என்ற கேள்விக்குறியுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான் மந்திரி.

“மந்திரியே! நீர் சொல்வதெல்லாம் சரி தான். புலிப்பால் கொண்டு வரச் செல்லும் மணிகண்டனுக்கு பலத்த பாதுகாப்பு வேண்டும். அவனது உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது. இந்த உத்தரவாத்தை நீர் தந்தால் தான் இந்த திட்டத்துக்கு நான் சம்மதிப்பேன்” என்றாள் ராணி.

இந்த நிபந்தனையை மந்திரி ஒரு பொருட்டாகவே கருதவில்லை. காரியம் முடிந்த பிறகு நீலிக்கண்ணீர் வடித்து ராணியிடம் இருந்து தப்பி விடலாம். அது மட்டுமல்ல! இந்த சதியில் ராணியின் பங்கும் உண்டு என ராஜாவிடம் சொல்வதாக மிரட்டினால் அவளால் ஒன்றும் செய்ய முடியாது என கணக்கு போட்டான்.

-தொடரும்

தி.செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us