sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 5

/

சரணம் ஐயப்பா - 5

சரணம் ஐயப்பா - 5

சரணம் ஐயப்பா - 5


ADDED : டிச 30, 2021 01:02 PM

Google News

ADDED : டிச 30, 2021 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏன் சோதனை வருகிறது

அந்த மாமுனிவர் தான் துர்வாசர். இவர் பிறவி கோபக்காரர். இவருக்கு கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவரது தவபலம் பெருகும் என்பது சிவன் அவருக்கு அளித்த வரம். ஏனெனில் அவர் நியாயமானதற்கு மட்டுமே கோபப்படுவார். அது மட்டுமா, அவரது பெற்றோர் சாதாரணமானவர்கள் அல்ல. மும்மூர்த்திகளையும் தங்களது குழந்தைகளாகப் பெறுமளவுக்கு தவவலிமை பெற்ற அத்திரி முனிவர்-அனுசூயா தம்பதிகளின் புதல்வர்.

ஆம்... தாணு-சிவன், மால்-திருமால், அயன்-பிரம்மா ஆகிய மூவரையும் ஒருங்கிணைத்து தாணுமாலயன் என்ற பெயரில் ஒரு குழந்தையைப் பெற்றவர்கள் இவர்கள்.

அவரிடம் போய் மோதிப் பார்க்கலாமா. இந்திரன் தனது ஐராவதம் யானையில் பவனி வந்து கொண்டிருந்தான். எதிரே வந்த துர்வாச முனிவர் அவனிடம் தன்னிடமிருந்த லட்சுமி பூஜை செய்த மாலையை பிரசாதமாகக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக வாங்கி யானையின் மத்தகத்தில் வைத்தான். முனிவருக்கு மரியாதை செய்ய யானையை விட்டு இறங்கவும் இல்லை. அப்போது அந்த மாலையிலுள்ள மலரில் உள்ள தேனைக் குடிக்க சில வண்டுகள் வந்தன. அவை யானையைக் கொட்டி துன்புறுத்தின. வலி தாங்காத யானை மாலையை தும்பிக்கையால் துாக்கி வீசி விட்டது.

துர்வாசருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இந்திரனை நோக்கி, “தெய்வ பிரசாதத்தை அவமதித்த நீ, உன் செல்வத்தையும், தேவேந்திர பதவியையும் இழப்பாய்” என சாபமிட்டு விட்டார். கோயில்களுக்கு சென்று “என்னை பணக்காரன் ஆக்க மாட்டாயா” என்று கடவுளிடம் வேண்டுவர். ஆனால் ஏழ்மை விலகாது. மேலும் மேலும் கடன் வாங்கும் சூழலே வரும்.

“ஐயோ! உன்னை வணங்கியும் என்னை சோதிக்கிறாயே கடவுளே” என்று புலம்புவார்கள். ஆனால் ஏழ்மை அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா. அங்கே தரும் திருநீறு, குங்கும பிரசாதத்தை துாண்களில் கொட்டுவதால் தான். பிரசாதத்தை பத்திரப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வர வேண்டும். சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு விட்டு சுவரில் கையைத் தடவக்கூடாது. பிரசாதத்திற்குரிய மரியாதை தரப்படாவிட்டால் ஏழ்மை அதிகரிக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

அந்த மாலை காலம் முழுவதும் வாடாத தன்மை பெற்றது. யார் கழுத்தில் அது இருக்கிறதோ அவரை யாராலும் வெல்ல முடியாது. அதை மட்டும் தேவேந்திரன் பயபக்தியுடன் வாங்கியிருந்தால் எதிர்காலத்தில் தேவ அசுரர் போர்களே நடந்திருக்காது. ஆனால் விதி யாரை விட்டது. தேவேந்திரன் மட்டுமல்ல. துர்வாசரின் சாபம் மற்ற தேவர்களையும் நோக்கி பாய்ந்தது. ஒட்டு மொத்த தேவர்களும் தங்கள் செல்வத்தை இழந்து வறுமையில் சிக்கினர்.

இதைப் பயன்படுத்தி அசுரர்கள் மீண்டும் தேவர்களை அடிமைப்படுத்தினர். தங்களது வேலையாட்களாக அவர்களை நியமித்துக் கொண்டனர். இந்த நேரத்தில் மீண்டும் தேவலோகம் திரும்பிய மகிஷி கரம்பினி, தேவர்களை அணுஅணுவாக சித்ரவதை செய்தாள். அது மட்டுமல்ல! காடுகளில் முனிவர்கள் நடத்திய யாகங்களை நிறுத்தினாள். யாகசாலைகளை அடித்து நொறுக்கினாள். வேறுவழி தெரியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை நாடினர். அவர் எல்லாரையும் சமாதானம் செய்தார்.

“மகிஷியை அழிக்க ஒரு தெய்வமகன் வரப் போகிறான். அவன் வந்ததும் உங்கள் பிரச்னைக்கு தீர்வு வரும்” என்றார்.

தேவர்கள் குழம்பினர். மகிஷி பெற்றிருந்த வரம் தான் அதற்கு காரணம். ஒரு குழந்தை உலகில் பிறக்க வேண்டுமானால் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும். ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் குழந்தையே தன்னைக் கொல்ல இயலும் என மகிஷி வரம் பெற்றிருக்கிறாள். இது இயற்கைக்கு புறம்பானது. இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால் சிவன் இப்படி சொல்கிறார்... என்ன நடக்கப் போகிறது.

அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில், அழகே வடிவான ஒரு பெண் வந்தாள். இவள் யார் தெரியுமா. பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்து அமிர்தம் பெற்ற போது, அதைப் பகிர்ந்தளிக்க மோகினியாக வந்தவள். ஆம்... மகாவிஷ்ணு தான் அந்த மோகினி, ஆணான அவர் பெண்ணாக உருமாறி இந்தப் பணியைச் செய்தார். அவளைப் பார்த்ததும் சிவன் அவள் மீது ஆசை கொண்டார்.

மோகினி வேடத்தில் இருந்த திருமால் அதிர்ச்சியடைந்தார்.

“மைத்துனரே! நானும் ஆண் மகனே! சந்தர்ப்ப சூழலுக்காக பெண்ணாகியிருக்கிறேன். இதைப் பயன்படுத்தி தாங்கள் என் மீது ஆசை கொள்வது அழகல்ல” என சிவனிடம் கூறினார்.

சிவன் அவரிடம், “எனக்கு நான்கு வகை சக்தி உண்டு. அதில் ஒருவகை சக்தியில் இருந்து உருவாகியவரே நீங்கள். என் சக்தியை எனக்கே சொந்தமாக்கி கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் மகிஷிக்கு கொடுத்த வரத்தின் காலம் முடிந்து விட்டது. அவள் அழிய வேண்டுமானால் நம் மூலம் புத்திரன் உருவாகியே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்” என்றார்.

திருமாலும் ஒப்புக்கொண்டார். சிவமோகினி இணைப்பில் ஒரு அழகுக் குழந்தை தோன்றியது. அது மட்டுமல்ல! அவர்கள் இணைந்த போது வழிந்த வியர்வை ஆறாகப் பெருகியது. அதுவே கண்டகி என்னும் நதி. கண்டகி என்றால் காளி என்றும், நாராயணி என்றும் பொருள் உண்டு. சிவனின் துணைவியான பார்வதியின் அம்சமான காளி, திருமாலின் துணைவி லட்சுமியின் அம்சமான நாராயணி என்ற பெயரில் இந்த நதி ஓடியது. இருவரின் இணைப்பில் பிறந்த நதி என்பதால் இப்பெயர் வந்தது. இந்த நதி நீர் தெள்ளத் தெளிவாக ஓடினாலும் அந்த நீரிலும் புழுக்கள் உருவாகின.

வஜ்ரதந்தி என்பது அதன் பெயர். வஜ்ரதந்தி என்றால் 'வைரம் போல் ஒளி வீசுவது' என பொருள். இந்த புழுக்கள் தங்க நிறத்தில் இருக்கும். இவை ஆற்றுக்குள் இருக்கும் மணலிலேயே கூடு கட்டும். அந்த கூட்டுக்குள் சில காலம் வாழ்ந்து இறந்து விடும். அப்போது அது தங்கமாக மாறி விடும். கண்டகி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் இந்தக் கூட்டை உடைத்து, அதிலுள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு கூட்டை ஆற்றில் வீசி விடுவர். அது கல்போல் மாறி விடும். அந்தக் கூட்டில் சிலவற்றில் சிவ அல்லது விஷ்ணு சின்னம் இருக்கும். அதையே சாளக்ரமம் என்கிறார்கள். இதை சிவவிஷ்ணுவாகக் கருதி பூஜை செய்யும் வழக்கம் இன்று வரை நீடிக்கிறது.

சிவவிஷ்ணு புத்திரரான இந்தக் குழந்தை அவதாரம் செய்த நாள் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம், சனிக்கிழமை, பஞ்சமி திதி, விருச்சிக லக்னம் என்று தமிழகத்தில் சொல்கிறோம். ஆனால், சில நுால்களில் இவர் மார்கழியில் பிறந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது.

அநியாயத்தை அழித்து தர்மத்தைக் காக்க வந்திருக்கும் இந்த தெய்வக்குழந்தையை தேவர்களும், முனிவர்களும் கூட்டம் கூட்டமாக பார்க்க வந்தனர்.

அப்போது சிவன் திருமாலைப் பார்க்க, அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட திருமால், “ஆம்... இந்தக் கூட்டத்தின் பெயரையே இந்தக் குழந்தைக்கு சூட்டி விடுவோம்” என்றார். கூட்டத்துக்கும், குழந்தைக்கு பெயர் வைப்பதற்கும் என்ன சம்பந்தம்.

- தொடரும்

தி.செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us