sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பெண்கள் நமது கண்கள்

/

பெண்கள் நமது கண்கள்

பெண்கள் நமது கண்கள்

பெண்கள் நமது கண்கள்


ADDED : மே 19, 2019 07:59 AM

Google News

ADDED : மே 19, 2019 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரதீபன் என்ற மன்னர் நல்லாட்சி நடத்தினார். இருந்தாலும் அவருக்கு மனதில் ஒரு குறை இருந்தது. தனக்கு பின்னர் ஆட்சி நடத்த வாரிசு இல்லையே என வருந்தினார். அமைச்சர்களின் ஆலோசனைப்படி இமய மலையில் கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கு சென்றார். அங்கு தனிமையில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டார். ஒருநாள் அவரது தொடையில் யாரோ அமர்வது போல் இருக்கவே, தவம் கலைந்தது. மடியில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள்.

“யாரம்மா நீ ?” எனக் கேட்டார்.

“இவ்வழியே சென்ற போது உங்களது தவசக்தியால் கவரப்பட்டேன். உங்களைப் போன்ற அழகனையே தேடிக் கொண்டிருந்தேன். என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றாள்.

“தாயே! எனக்கு மணமாகி விட்டது. குழந்தை வரம் வேண்டி இங்கு தவமிருக்கிறேன். என்னைப் போய்...” என்று இழுத்த மன்னரைத் தடுத்தாள் அவள்.

“குழந்தை இல்லை என்றால் இரண்டாம் திருமணம் செய்வது ஏற்க கூடிய ஒன்று தானே! என்னை மணந்து கொள்ளுங்கள்'' என்றாள்.

பிரதீபன் சிரித்தார்.

“பெண்ணே! சாஸ்திரப்படி ஒரு ஆணின் இடது பாகம் மனைவிக்குரியது. வலதுபாகம் மகனுக்குரியது. நீ என் வலது மடியில் அமர்ந்ததால், என் மகனின் மனைவி (மருமகள்) ஆகிறாய். உன்னைத் தொட்டால், மருமகளைத் தொட்ட பாவத்துக்கு ஆளாவேன்.,” என்றார். உடனே அப்பெண் வானுக்கும், பூமிக்குமாய் உயர்ந்து நின்றாள்.

“பிரதீபா! நான் தான் கங்காதேவி. பெண்களுக்கு மரியாதை அளிக்கும் உன் உயர்ந்த குணத்தை எடுத்துக்காட்டவே இங்கு வந்தேன். விரைவில் உனக்கு மகன் பிறப்பான். அவனை மணப்பதற்காக நான் பூமியில் அவதரிப்பேன்; உன் எண்ணப்படியே மருமகளும் ஆவேன்'' என்றாள். அதன்படியே சந்தனு என்னும் மகன் பிறந்தான். அவனையே கங்காதேவி மணந்தாள். அவர்களுக்கு மகனாகப் பிறந்தவரே பிதாமகர் பீஷ்மர்.

அந்தக் காலத்தில் பெண்களை தாயாக, மகளாக, மருமகளாக ஆண்கள் கருதினர். இதனால் தான், அன்றைய சமுதாயம் சீரும் சிறப்புமாக இருந்தது.






      Dinamalar
      Follow us