ADDED : அக் 27, 2023 11:27 AM

மனிதரின் பாவங்கள் போக்கும் வழிபாடுகளில் ஒன்று பிரதோஷம். அமாவாசை, பவுர்ணமியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னதாக வரும் திரயோதசி திதியே இந்த பிரதோஷ நாள். அன்று மாலையில் சிவன் கோயிலில் உள்ள நந்தீஸ்வரர், சிவபெருமானுக்கு பதினாறு வகையான அபிஷேகம், ஆராதனை நடக்கும்.
இவ்வழிபாட்டை மக்களிடம் பிரபலப்படுத்திய பெருமை காஞ்சி மஹாபெரியவரின் பக்தர்களில் ஒருவரான வெங்கட்ராம ஐயர் என்ற பிரதோஷ மாமாவை சேரும்.
குருபிரம்மா குரு விஷ்ணு, குருதேவோ மஹேஸ்வர:
குரு சாட்சாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நம:
மேற்கண்ட ஸ்லோகத்தின் முழுமையான விளக்கம் பிரதோஷ மாமா. 'என்னுள்ளும் எங்கும் இருப்பது நீயே' என மஹாபெரியவரை சரணடைந்து வாழ்ந்தார். அவர் எங்கு சென்றாலும் உடன் சென்று தொண்டு செய்ததோடு, பக்தர்களிடம் பாகுபாடின்றி உதவினார். புண்ணிய செயல்களுக்கு நிதி திரட்டி கொடுத்தார். காஞ்சி மஹாபெரியவர் நடத்திய அனைத்து பணிகளையும் முன்னின்று நடத்தினார்.
நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் பக்தி மார்க்கத்தை பின்பற்றினார். இவரது 97வது ஜெயந்தி தினம் இன்று (அக்.27, 2023) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காஞ்சிபுரம் பங்காரு அம்மன் தோட்டத்தில் அக்.31,2023 வரை தினமும் ஹோமம், சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு நடக்கிறது.