
மகாபாரதப் போரில், அர்ஜூனனின் தேருக்கு சாரதியாக இருந்தவர் கிருஷ்ணர். தினமும் போர் முடிந்து திரும்பியதும், தேரை அதற்குரிய இடத்தில் நிறுத்தி, குதிரைகளை குளிப்பாட்டி
லாயத்தில் கட்டுவார் கிருஷ்ணர். அவற்றிற்கு கொள்ளு வைத்து சாப்பிடும் வரை காத்திருப்பார். குடிக்க தண்ணீர் கொடுப்பார். லாயத்தை சுத்தம் செய்வார். அதன் பிறகே பிற பணிகளில் ஈடுபடுவார்.
இதைக் கண்ட அர்ஜூனன், “கிருஷ்ணா! இந்த எடுபிடி வேலைகளைச் செய்ய எத்தனையோ பணியாளர்கள் நம்மிடம் உள்ளனர். அந்தஸ்து மிக்க நீ இதைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.
கிருஷ்ணர் சிரித்தார்.
''அர்ஜூனா! நான் இப்போது தேரோட்டி. தேரை செலுத்துவது மட்டும் என் வேலையல்ல. தேரோட்டி தான் இந்த எடுபிடி வேலைகளையும் செய்ய வேண்டும். ஒரு வேலையில் ஈடுபடுபவன் அதைச் சார்ந்த மற்ற பணிகளையும் செய்வது தான் முறை. அதையே நான் செய்கிறேன்'' என்றார்.
பணி சார்ந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தினால், கிருஷ்ணரைப் போல நீங்களும் சாதனையாளராகத் திகழ்வீர்கள்.