தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சிட்டோகார்க் கிருஷ்ணர்

சிட்டோகார்க் கிருஷ்ணர்

சிட்டோகார்க் கிருஷ்ணர்


ADDED : ஆக 27, 2026 08:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 08:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜஸ்தான் சிட்டோகார்க் என்ற இடத்திலுள்ள கிருஷ்ணர் புகழ் பெற்றவர். பெனார்ச் நதிக்கரையில் உள்ள இக்கோயில், கிருஷ்ணர் மன்னராக அருள்புரியும் துவாரகை கோயிலுக்கு இணையானது.

போலோராம் குர்ஜார் என்ற பக்தரின் கனவில் கிருஷ்ணர் தோன்றி, சாப்பர் என்னும் ஊரில் சிலை வடிவில் மண்ணுக்குள் இருப்பதாக தெரிவித்தார். அந்த இடத்தில் மூன்று கருப்பு கிருஷ்ணர் சிலைகள் புதைந்திருந்தன. இப்பகுதியைச் சேர்ந்த சாப்பர், மண்டாபியா, பட்சோடா என்னும் ஊர்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 5 கி.மீ., சுற்றளவில் இக்கோயில்கள் உள்ளன. இதில் சிட்டோகார்க் கிருஷ்ணர் ராஜபுத்திர மன்னர்களின் இஷ்ட தெய்வம்.

கோயிலின் நுழைவாயிலில் இருபுறமும் நம்மை வரவேற்கும் விதத்தில் கம்பீரமான யானை சிலைகள் உள்ளன.

ராஜஸ்தானின் குர்ஜாரா பாணியில் குவிமாடங்கள், விமானங்கள், அலங்கார துாண்கள், வளைவுகள், மேற்கூரைகள் கட்டப்பட்டுள்ளன. சுவர் முழுவதும் ராமாயண, மகாபாரத சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன.

இளஞ்சிவப்பு வண்ண சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோயில் இது. கருவறையின் முன் மண்டபத்தில் உள்ள தொங்கு விளக்குகள், கண்ணாடி வேலைப்பாடுகள் கலைநயம் மிக்கவை.

மூலவர் கிருஷ்ணர் மகாராஜாவைப் போல் கிரீடம், கவசம், பலவண்ண ஆடைகள் அணிந்திருக்கிறார். புன்னகையும், தாமரைப்பூ போன்ற கண்களும் கருணையை வெளிப்படுத்துகின்றன. அவருக்கு பிரியமான பசுக்கள், கன்றுகள் அருகில் நிற்கின்றன. சன்னதியின் இருபுறமும் சாமரம் வீசுவோரின் சிற்பங்கள் உள்ளன. சிவபெருமான், ஹனுமனுக்கு சன்னதிகள் இங்குள்ளன.

எப்படி செல்வது

* சிட்டோகார்கில் இருந்து 30 கி.மீ.,

* உதய்பூரில் இருந்து 82 கி.மீ.,

விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி அன்னகூடை உற்ஸவம், ஹோலி.

நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:30 - 11:00 மணி

தொடர்புக்கு: 01470 - 245 493

அருகிலுள்ள கோயில் : ஸ்ரீநாத்வாரா கிருஷ்ணர் 116 கி.மீ., (உற்சாகமுடன் வாழ...)

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மதியம் 3:55 - 5:55 மணி

தொடர்புக்கு: 02953 - 233 484

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us