தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/மருத்துவர்களின் சுவாமி

மருத்துவர்களின் சுவாமி

மருத்துவர்களின் சுவாமி


ADDED : மே 14, 2026 12:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் நகரில் உள்ளது பாபா பைத்யநாத் தாம் கோயில். 51 சக்தி பீடங்களில் ஒன்றான இங்குள்ள சுயம்பு லிங்கம் 'பைத்யநாத்' என அழைக்கப்படுகிறது. இவர் நோய் தீர்க்கும் பெரிய மருத்துவராக இருப்பதால் 'மருத்துவர்களின் சுவாமி' என பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சிவபெருமானின் மனைவி தாட்சாயிணி. இவள் தன் தந்தை தட்சனின் யாகத்துக்கு, கணவரின் சொல்லை மீறிச் சென்றாள். ஏற்கனவே மருமகன் சிவனை அவமதித்த தட்சன், தன் மகளையும் அவமதித்தான். இதனால் யாக நெருப்பில் விழுந்து உயிர் விட்டாள். இதை அறிந்த சிவபெருமான் கோபத்தில் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்தார். ஆனாலும் சிவபெருமானுக்கு கோபம் குறையவில்லை.

தாட்சாயிணியின் உடலை சுமந்து கொண்டு ஈரேழு உலகத்தையும் வலம் வந்து தாண்டவம் ஆடினார். இறுதியில் சக்கராயுதத்தால் தாட்சாயணியின் உடலை திருமால் தகர்த்தார். அவை 51 துண்டுகளாகி பூமியில் சிதறி விழுந்தன. அப்படி அவளின் இதயம் விழுந்த பகுதி தியோகர். இதனால் இத்தலம் இதய பீடமாக உள்ளது. இதை குறிக்கும் விதத்தில் பெரிய சிவப்பு நுால் கயிற்றால் கோபுரம், விமானத்தை இணைத்து கட்டியுள்ளனர்.

இத்தலத்திற்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் அருகில் உள்ள ஜசிதிஹ் நகரில் இருந்து வெறுங்காலுடன் நடந்து வருகின்றனர். அப்போது கங்கா தீர்த்தம் நிரம்பிய பானையை காவடியாக சுமந்து செல்கிறார்கள். இந்தச் செயல் தாட்சாயிணியின் அஸ்தியை சிவபெருமான் எடுத்துச் செல்வதைக் குறிக்கிறது. ஷ்ரவண மாதத்தில் நடைபெறும் மேளா இங்கு முக்கிய திருவிழா. அப்போது காவடி யாத்திரை சுமக்கும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.



எப்படி செல்வது

* ஜசிதிஹ் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 7 கி.மீ.,

* தியோகர் விமான நிலையத்தில் இருந்து 9 கி.மீ.,

விசேஷ நாள்: ஷ்ரவண மேளா, மகா சிவராத்திரி.

நேரம்: அதிகாலை 4:00 - இரவு 10:00 மணி

அருகிலுள்ள கோயில்: தியோகர் நௌலகா கோயில் 3 கி.மீ., (பாவம் தீர...)

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மதியம் 2:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 0651 - 233 1828

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us