தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நவராத்திரி நாயகி

நவராத்திரி நாயகி

நவராத்திரி நாயகி


ADDED : அக் 08, 2026 01:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 01:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 10 : கொலு வைக்க காலை 10:30 - 11:30 மணி

அக்டோபர் 11-19 : நவராத்திரி

அக்டோபர் 21 : கொலு எடுக்க காலை 9:00 - 10:00 மணி

நவராத்திரி நாளில் தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்பிகை ஜொலிக்கிறாள். விரதமிருக்கும் பெண்களுக்காக அம்பிகையின் அலங்காரம், பூஜை, திதி, கோலம், பூ, நைவேத்யம், வழிபாட்டின் பலனை கீழே கொடுத்துள்ளோம்.

முதல் நாள்

அலங்காரம்: மகேஸ்வரி - -மது, கைடபரை வதம் செய்தவள்

பூஜை: சிறுமியை குமாரியாக பாவித்து வணங்குதல்.

திதி: பிரதமை

கோலம்: அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக்கோலம்

பூ: மல்லிகை, செவ்வரளி, வில்வம்

நைவேத்யம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம்,மொச்சை, பருப்பு வடை

பலன்: செல்வம் பெருகும், ஆயுள் அதிகரிக்கும்.

இரண்டாம் நாள்

அலங்காரம்: ராஜராஜேஸ்வரி -- மகிஷாசுரனை வதம் செய்தவள்

பூஜை: சிறுமியை கவுமாரியாக பாவித்து வழிபடுதல்

திதி: துவிதியை

கோலம்: கோதுமை மாக்கோலம்

பூ: முல்லை, துளசி, கொன்றை, சாமந்தி, சம்பங்கி

நைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரை

பலன் : உடல் நலன் கிடைக்கும்.

மூன்றாம் நாள்

அலங்காரம்: வராகி - -பன்றி முகம் கொண்டவள்

பூஜை: சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குதல்

திதி: திருதியை

கோலம்: மலர்க்கோலம்

பூ: செண்பகம், குங்கும அர்ச்சனை

நைவேத்யம் : கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்

பலன் : குறையில்லாத வாழ்வு.

நான்காம் நாள்

அலங்காரம்: மகாலட்சுமி - -சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்

பூஜை: சிறுமியை ரோகிணியாக பூஜித்தல்

திதி: சதுர்த்தி

கோலம்: அட்சதை கோலம்

பூ: செந்தாமரை, ரோஜா

நைவேத்யம்: அவல் கேசரி, பால் பாயாசம், பட்டாணி சுண்டல், கல்கண்டு சாதம்.

பலன்: கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள்

அலங்காரம்: மோகினி -- சும்ப, நிசும்பர்களை வதம் செய்தவள்

பூஜை: சிறுமியை வைஷ்ணவியாக வழிபடுதல்

திதி: பஞ்சமி

கோலம்: கடலை மாவு கோலம்

பூ: கதம்பம், மரிக்கொழுந்து

நைவேத்யம்: பால் சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல்

பலன் : விருப்பம் நிறைவேறும்.

ஆறாம் நாள்

அலங்காரம்: சண்டிகா தேவி - சர்ப்ப ஆசனத்தில் வீற்றிருப்பவள்

பூஜை: சிறுமியை காளிகாம்பாளாக எண்ணி வழிபடுதல்

திதி: சஷ்டி

கோலம்: கடலை மாவு கோலம்

பூ: விபூதிப்பச்சை, செம்பருத்தி, சம்பங்கி

நைவேத்யம்: தேங்காய் சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்,

பலன்: கவலை தீரும், வழக்கில் வெற்றி கிடைக்கும்.

ஏழாம் நாள்

அலங்காரம்: சாம்பவி துர்கை - -பொற்பீடத்தில் அமர்ந்திருப்பவள்

பூஜை: சிறுமியை பிராஹ்மியாக நினைத்து வழிபடுதல்

திதி: சப்தமி

கோலம்: மலர்க்கோலம்

பூ: மல்லிகை, முல்லை, தும்பை, தாழம்பூ

நைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், புட்டு

பலன்: விரும்பிய வரம் கிடைக்கும்.

எட்டாம் நாள்

அலங்காரம்: நரசிம்ம தாரிணி - -ரக்த பீஜனை வதம் செய்தவள்

பூஜை: சிறுமியை கவுரியாக வணங்குதல்

திதி: அஷ்டமி

கோலம்: தாமரை மலர்க்கோலம்

பூ: வெண்தாமரை, சம்பங்கி, நந்தியாவட்டை

நைவேத்யம்: பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை

பலன்: நல்லெண்ணம் உண்டாகும்.

ஒன்பதாம் நாள்

அலங்காரம்: பரமேஸ்வரி - திரிசூலத்துடன் இருப்பவள்

பூஜை: சிறுமியை சாமுண்டியாக வழிபடுதல்

திதி: நவமி

கோலம்: வாசனைப் பொடிக்கோலம்

பூ: துளசி, வெள்ளை நிறப்பூக்கள், தாமரை, மரிக்கொழுந்து

நைவேத்யம்: உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், எள் பாயாசம், கேசரி, எள் உருண்டை

பலன் : சந்ததி நல்வாழ்வு பெறுதல்.

பத்தாம் நாள்

அலங்காரம்: விஜயா - பார்வதியின் ஸ்துால வடிவம்

திதி: தசமி

கோலம்: மலர்க்கோலம்

பூ: பலவிதமான மலர்கள்

நைவேத்யம்: பால் பாயாசம், இனிப்பு வகைகள், சித்ரான்னம்

பலன் : சகல சவுபாக்கியம்.

இந்நாட்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம், தாம்பூலம், பூ, பழவகைகள், ரவிக்கைத்துணி இவற்றைத் தானமாகக் கொடுத்தால் தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us