sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பிரதோஷ கோயில்

/

பிரதோஷ கோயில்

பிரதோஷ கோயில்

பிரதோஷ கோயில்


ADDED : நவ 14, 2025 08:07 AM

Google News

ADDED : நவ 14, 2025 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரயோதசி திதியன்று மாலையில் எல்லா சிவன் கோயிலிலும் பிரதோஷபூஜை நடைபெறும். இந்த பிரதோஷம் முதலில் தோன்றிய ஊர்தான் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள திருப்பாலைவனம். இங்கு சிவபெருமான் 'பாலீஸ்வரர்' என்ற பெயரில் அருள்புரிகிறார்.

அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். ஆலகாலம் என்னும் விஷம் முதலில் வெளிப்பட்டது. உலகை காப்பதற்காக இந்த விஷத்தை சாப்பிட்டு தன் கழுத்தில் அடக்கிக் கொண்டார் சிவன். இதனால் 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றார். மேலும் பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது.

அசுரர்களுக்கு தெரியாமல் அமிர்தத்தை மறைவான இடத்திற்கு தேவர்கள் கொண்டு சென்றனர். அந்த இடமே திருப்பாலைவனம். பாலை என்னும் மரங்கள் நிறைந்த இப்பகுதியில் அமிர்தத்தில் சிறு பகுதியை எடுத்து ஒரு மரத்தடியில் சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்தனர். அவரை பூஜித்து அமிர்தத்தை சாப்பிட்டனர். அப்போது சிவபெருமான் ஆடிய நடனமே பிரதோஷ நடனம். அதனால் பிரதோஷ பூஜை இங்குதான் முதலில் நடந்தது. தேவர்கள் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கம், காலப்போக்கில் ஒரு பாலை மரத்திற்குள் மறைந்தது.

பல வருடங்களுக்கு பிறகு படையுடன் வந்த முதலாம் ராஜேந்திர சோழன் இப்பகுதியில் தங்கினார். அப்போது பாலை மரத்தில் கட்டி வைத்திருந்த யானை மயங்கி விழுந்தது. அந்த மரத்தில் மர்மம் இருப்பதாக கருதி மன்னரின் உத்தரவுப்படி மரத்தை வெட்ட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் ரத்தம் பீறிட்டது. முன்பு தேவர்கள் வழிபட்ட சிவலிங்கம் வெளிப்பட்டது. மகிழ்ச்சி அடைந்த மன்னர் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். சுவாமிக்கு பாலீஸ்வரர் என்றும், அம்மனுக்கு லோகாம்பிகா என்றும் பெயரிட்டனர். பிற்காலத்தில் வீர ராஜேந்திரன், குலோத்துங்கன், விஜயநகர மன்னர்கள் இங்கு திருப்பணி செய்தனர்.

ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் உயர்ந்து நிற்கிறது. கோயிலின் முன்புள்ள பதினாறுகால் மண்டபம் கலையழகு மிக்கது. தவளையே இல்லாத அமிர்த புஷ்கரணி குளமும் இங்குள்ளது. இங்கு நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். ஜாதக பொருத்தம் இல்லாதவர்கள் இங்கு திருமணம் செய்தால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். சிவனடியாரான மாணிக்கவாசகர் இங்கு பாடியுள்ளார்.

எப்படி செல்வது: சென்னையில் இருந்து பழவேற்காடு வழியாக 45 கி.மீ.,

விசேஷ நாள்: பிரதோஷம், அமாவாசை, அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி.

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 96989 10505, 94441 60766

அருகிலுள்ள கோயில்: சிறுவாபுரி பாலசுப்ரமணியர் 26 கி.மீ., (வீடு கட்டுவதற்கு)

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 94441 71529, 94442 80595






      Dinamalar
      Follow us