sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பிரிந்தவர் சேர...

/

பிரிந்தவர் சேர...

பிரிந்தவர் சேர...

பிரிந்தவர் சேர...


ADDED : ஏப் 17, 2025 12:32 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணம் என்பது ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒப்பந்தம். இதில் விரிசல் ஏற்பட்டு துன்புறுவோருக்கு வாழ்வு தருகிறாள் சவுண்டாட்டி ரேணுகா தேவி. கர்நாடகாவின் பெல்காமுக்கு அருகிலுள்ள இக்கோயிலை ஒருமுறை தரிசித்தாலும் பிரிந்தவர் சேர்வர்.

ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. அவள் ஒரு நாள் தண்ணீர் கொண்டு வர குளத்திற்கு சென்றாள். களிமண்ணால் பானை செய்து உடனடியாக அதில் தண்ணீர் எடுத்து வருவது அவளது வழக்கம். அன்று வானில் பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனது நிழலை குளத்து நீருக்குள் கண்டாள். ஒருகணம் அவனது அழகில் மயங்கினாள். அதன்பின் பச்சை மண்ணில் பானை செய்யும் சக்தி அவளுக்கு இல்லாமல் போனது.

கணவரான ஜமதக்னி முனிவர் ஞான திருஷ்டியால் குளத்தில் நடந்ததை உணர்ந்தார். கோபத்துடன் மனைவியின் தலையை கோடரியால் வெட்டும்படி மகனான பரசுராமனுக்கு உத்தரவிட்டார். அவனும் தந்தையின் கட்டளையை ஏற்று தாயின் தலையை துண்டித்தான். அதற்கு ஈடாக வரம் அளிப்பதாக ஜமதக்னி வாக்கு கொடுத்தார். வரத்தின் பலத்தால் பரசுராமன் மீண்டும் தாயை உயிர் பெறச் செய்தான். இந்த ரேணுகாதேவியே இங்கு மூலவராக இருக்கிறாள்.

பொம்மப்ப நாயக்கர் என்னும் மன்னர் 1514ல் இங்குள்ள சித்தார்த்த பர்வத் குன்றில் கோயிலைக் கட்டினார். சாளுக்கிய, ராஷ்டிரகூடர்களின் கட்டட பாணியில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையில் அம்மனின் வெட்டப்பட்ட தலை மட்டுமே உள்ளது. அம்மனுக்கு எல்லம்மா என்றும் ஒரு பெயருண்டு. சத்தியமா என்னும் அம்மனுக்கும் சிறிய கோயில் இங்குள்ளது. அதனை தரிசித்த பிறகே பக்தர்கள் ரேணுகாதேவியை தரிசிக்கின்றனர். விநாயகர், மல்லிகார்ஜூனர், சித்தேஸ்வரர், பரசுராமர், ஏகநாதர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தபின் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புடவை சாத்துகின்றனர்.

எப்படி செல்வது:

* பெங்களூருவிலிருந்து பெல்காம் செல்லும் வழியில் தார்வார் என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் சென்று சவுண்டாட்டியை அடையலாம். அங்கிருந்து 5 கி.மீ.,

* பெல்காமிலிருந்து 78 கி.மீ.,

விசேஷ நாள்: நவராத்திரி, மகாசிவராத்திரி

நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

அருகிலுள்ள கோயில்: பெல்காம் கபிலேஸ்வரர் 78 கி.மீ., (நல்ல புத்தி கிடைக்க...)

நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி






      Dinamalar
      Follow us