தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/ராம்ராஜ்தலா ராமர்

ராம்ராஜ்தலா ராமர்

ராம்ராஜ்தலா ராமர்


ADDED : ஜூன் 18, 2026 09:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 09:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் உள்ளது ராம்ராஜ்தலா ராமர் கோயில். இங்கு துர்கை, லட்சுமி, காளி, கிருஷ்ணர், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.

300 ஆண்டு பழமையான இக்கோயிலில் காலம் காலமாக ராமர் உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஸ்ரீராமர் மீதுள்ள பக்தியால் 'ராமசரித மானஸ்' என்ற காவியத்தை எழுதினார் துளசிதாசர். இதை படித்து மெய் மறந்தார் அவரது சீடர் ராமதாசர். எனவே இதிலுள்ள வசனங்களை தினமும் ஓதி வந்தார். இப்படி இவரால் முதன் முதலில் சிறிய அளவில் எளிய குடிசையாக கோயில் உருவாக்கப்பட்டது. இன்றும் கோயிலில் துளசிதாசர் சிலை உள்ளது.

அதைப் போல் இவ்வூரில் ராமராஜ என்ற முனிவர் வாழ்ந்தார். ஸ்ரீராமபிரானின் புகழ்பாடி நோயை குணப்படுத்தும் ஆற்றலை பெற்றிருந்தார். இதனால் இப்பகுதிக்கு 'ராம ராஜதலா' எனப்பெயர் வந்தது. தற்போது பார்க்கும் கோயிலைக் கட்டியவர், இப்பகுதியில் ஜமீன்தாரான அயோத்யா ராம் சவுத்ரி. இவரது கனவில் தோன்றிய ஸ்ரீராமபிரான் இங்கு கோயில் கட்டும்படி கூறினார்.

ஆனால் அதில் சிக்கல் ஒன்று ஏற்பட்டது. காரணம் இங்கு சரஸ்வதிக்கு பூஜை நடந்து வந்தது. இதனால் ராமர் பூஜைக்கு எதிர்ப்பு வந்தது. நாளடைவில் இப்பிரச்னை தீர்ந்து இருவருக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. தேர்களை நிலை நிறுத்த பெரிய ஷெட் இருக்குமே, அது போன்ற அமைப்பில் உள்ளது கோயில். கருவறையில் கண்களை கவரும் பளிங்கால் ஆன ஸ்ரீராமர், சீதையை தரிசிக்கலாம். இரு கைகளில் வில், அம்பு ஏந்தி, தலையில் கீரிடம், முகத்தில் மீசையுடன், பச்சை நிற கோதண்ட ராமராக இருக்கிறார். மேற்கு வங்கத்தில் சுவாமிகளுக்கு மீசையுண்டு.

சீதையும் மஞ்சள் முகத்துடன் தலையில் கீரிடம், நகைகளுடன் பளிச்சென இருக்கிறாள். இடது பக்கத்தில் லட்சுமணன், ஆஞ்சநேயர் உள்ளனர். ஸ்ரீராமருக்கு வலது பக்கத்தில் சிவன் ஒரு மண்டபத்திலும், சீதைக்கு இடது பக்கத்தில் கிருஷ்ணர் ஒரு மண்டபத்திலும் உள்ளனர். இந்த குட்டி மண்டபத்திற்கு மேலே துர்கையின் பல வடிவங்கள் உள்ளன. அதைப் போல் ஸ்ரீராமர், சீதைக்கு பின்னால் சற்று உயர்ந்த பீடத்தில் சரஸ்வதி இருக்கிறாள். அவளுக்கு வலது பக்கத்தில் மகாலட்சுமியும், இடது பக்கத்தில் காளியும் உள்ளனர். இத்தலத்தின் சிறப்பே பூஜைதான். சைத்ர பைசாக் மாதத்தில் (சித்திரை) ராம நவமியில் பூஜை துவங்கி, ஷ்ரவண மாதத்தின் (ஆவணி) கடைசி ஞாயிறு அன்று முடிகிறது. மேற்கு வங்கத்தின் நீண்ட நாள் பூஜை இதுவே.

எப்படி செல்வது: கோல்கட்டா ஹவுரா பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,

விசேஷ நாள்: ஸ்ரீராம நவமி, தீபாவளி.

நேரம்: காலை 9:30 - இரவு 9:30 மணி

தொடர்புக்கு: 033 - 2455 8026

அருகிலுள்ள கோயில்: தட்சனேஸ்வர் காளி 18 கி.மீ., (எதிரி தொல்லை விலக...)

நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மதியம் 3:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 033 - 2564 5222

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us