sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சுபயோகம் வந்தாச்சு

/

சுபயோகம் வந்தாச்சு

சுபயோகம் வந்தாச்சு

சுபயோகம் வந்தாச்சு


ADDED : ஜன 23, 2025 11:13 AM

Google News

ADDED : ஜன 23, 2025 11:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தர்களின் கனவை நனவாக்குபவராக திருச்சேறை சாரநாதப் பெருமாள் இருக்கிறார். இவரை தரிசித்தவருக்கு வாழ்வில் சுபயோகம் தொடங்கும்.

திரேதாயுகத்தின் முடிவில் மகாவிஷ்ணுவின் வழிகாட்டுதலால் பிரம்மா மண் எடுத்து குடம் செய்தார். அதில் வேதம், சாஸ்திரங்களை ஆவாஹனம் செய்து, அடுத்த யுகத்திற்கான படைத்தல் தொழிலை மேற்கொண்டார். பிரம்மா செய்த குடம் இருக்கும் இடம் கும்பகோணம் என்றும், குடத்திற்கான மண் எடுத்த இடம் சார க்ஷேத்திரம் என்றும் பெயர் பெற்றது. சார க்ஷேத்திரம் தற்போது 'திருச்சேறை' எனப்படுகிறது. இங்கு சாரநாதப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார்.

காவிரிக்கும், கங்கைக்கும் தங்களுக்குள் யார் சிறந்தவர் என்ற போட்டி எழுந்தது. கங்கைக்கும் மேலான சிறப்பை பெற விரும்பிய காவிரி, திருச்சேறையில் தவம் மேற்கொண்டாள். மகாவிஷ்ணு விரும்பிய வரம் அளித்ததோடு, 'சாரநாதப்பெருமாள்' என்னும் பெயரில் இங்கிருக்கிறார்.

முதலில் குழந்தை வடிவில் காட்சியளித்தார் விஷ்ணு. வந்திருப்பவர் கடவுளே என்பதை உணர்ந்த காவிரி வணங்கினாள். இதன் பின் கருட வாகனத்தில் எழுந்தருளினார். குழந்தை வடிவில் வந்ததால் சுவாமிக்கு 'மாமதலைப்பிரான்' எனப் பெயருண்டு. 'மதலை' என்றால்' குழந்தை'. மார்க்கண்டேய மகரிஷி இவரை வழிபட்டு நற்பேறு பெற்றார்.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயிலில் இரு பிரகாரங்கள் உள்ளன. மூலவர் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம், செந்தாமரை, கதாயுதம் ஏந்தியபடி உள்ளார். சாரநாயகி தாயார், ராஜகோபாலர், ராமர், மணவாள மாமுனிகள், கண்ணன் சன்னதிகள் உள்ளன.

உற்ஸவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சாரநாயகி என்னும் நான்கு தாயார்களும், மார்பில் மகாலட்சுமியும் உள்ளனர். இவர்களை 'பஞ்ச லட்சுமி' என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேற தொடர்ந்து ஐந்து புதன் இவருக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்கின்றனர்.

எப்படி செல்வது: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 40 கி.மீ.,

விசேஷ நாள்: அட்சய திருதியையன்று கருட சேவை, ஆடியில் 108 கலச திருமஞ்சனம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை மாதம் பிரம்மோற்ஸவம்

நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 94431 04374, 0435 - 246 8001

அருகிலுள்ள கோயில்: கும்பகோணம் சாரங்கபாணி 40 கி.மீ., (வெற்றி கிடைக்க...)

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 94435 24529, 0435 - 243 0349






      Dinamalar
      Follow us