ADDED : நவ 28, 2024 01:19 PM

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மாருதி சபா கோயிலில் கொப்பரை தேங்காயை கட்டினால் திருமணம் நடக்கும்.
முகப்பில் உள்ள சிறிய கோபுரத்தை கடந்தவுடன் ஆங்காங்கே தெரியும் சன்னதிகள், குட்டி குட்டியாக இருக்கும் தெய்வங்களின் சிலைகள் என இக்கோயிலின் அழகு பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். கோயிலில் நிலவும் அமைதி நம் மனதிலும் குடிகொள்ளும்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரங்கநாதர், பக்த ஆஞ்சநேயர், காசி விஸ்வநாதர், சொர்ண கணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், பிரம்மா சன்னதிகள் இங்கு உள்ளன.
ஆஞ்சநேயர் சன்னதியின் முன் மஞ்சள் துணியில் கொப்பரை தேங்காய் கட்டினால் விரும்பிய மணவாழ்க்கையும், தம்பதி ஒற்றுமையும் ஏற்படும். குழந்தை இல்லாதவர்கள் வெள்ளை துணியில் தேங்காயை கட்டுகின்றனர். இதற்காக வியாழன், சனிக்கிழமையில் சிறப்பு பூஜை நடக்கிறது.
மகாலட்சுமி, சரஸ்வதி, காமாட்சிக்கு தனிச்சன்னதிகள் உள்ளன. கல்வியில் சிறக்க சரஸ்வதிக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர். இதை குழந்தைகளின் நாக்கில் தடவினால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.
எப்படி செல்வது: செங்கல்பட்டு - சென்னை செல்லும் வழியில் 16 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம், ஏகாதசி, கார்த்திகை சோமவாரம்.
நேரம்: காலை 6:30 - 10:00 மணி; மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 95661 09287
அருகிலுள்ள கோயில் : ஆத்துார் முக்தீஸ்வரர் 18 கி.மீ., (நிம்மதிக்கு)
நேரம்: காலை 6:00 - 10:30 மணி; மாலை 4:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 94438 80932