
விருப்பம் நிறைவேறுவதில் தடையா..... மகாராஷ்டிரா மாநிலம் ஆனந்தவல்லியில் உள்ள நவஷ்ய விநாயகரை தரிசியுங்கள்.
பக்தர் ஒருவர் கோதாவரி நதிக்கரையில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு காட்சியளித்த விநாயகர் தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு உத்தரவிட்டார். அதன்படி கோயில் அமைத்து 'நவஷ்ய' எனப் பெயர் சூட்டினார். மராட்டிய மொழியில் நவஷ்ய என்பதற்கு 'விருப்பத்தை நிறைவேற்றுபவர்' என பொருள். வரங்களைத் தருவதில் முதல்வராக இருக்கிறார் இவர்.
மன்னர் ரகோபா, அவரது மனைவி ஆனந்த பாய் காலத்தில் இது கருங்கல் கட்டடமாக மாற்றப்பட்டது. தோட்டமாக உள்ள இப்பகுதியில் இருந்து 50 படிகள் கீழே இறங்கினால் கோயிலை அடையலாம். வழி எங்கும் வேண்டுதலுக்காக கட்டப்பட்ட மணிகளும், நுழைவு வாயிலை ஒட்டி அஷ்ட விநாயகர் சிலைகளும் உள்ளன.
கருவறையில் செந்துாரம் பூசிய கோலத்தில் தலைப்பாகையுடன் விநாயகர் இருக்கிறார். சன்னதியின் சுவர் முழுவதும் வெள்ளித்தகடு பதிக்கப்பட்டுள்ளது. பேஷ்வா இன மக்களின் குலதெய்வமான இவரை தரிசிப்பவரின் எதிர்காலம் சிறப்பது உறுதி.
எப்படி செல்வது: நாசிக்கில் இருந்து 7 கி.மீ.,
விசேஷ நாள்: சங்கடஹரசதுர்த்தி
நேரம்: காலை 6:00 - இரவு 10:00 மணி
தொடர்புக்கு: 98194 32999
அருகிலுள்ள கோயில்: காலாராம் (ராமர்) 7 கி.மீ., (நினைத்தது நிறைவேற...)
நேரம்: அதிகாலை 5:00 - இரவு 10:00 மணி