sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

விவசாயிகளின் தாய்

/

விவசாயிகளின் தாய்

விவசாயிகளின் தாய்

விவசாயிகளின் தாய்


ADDED : ஜூன் 20, 2025 08:25 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 08:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகளின் தாயாக போற்றப்படும் 'மெல்டி மாதா' கோயில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ளது. வெள்ளி அன்று இந்த அம்மனை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும்.

தவம் செய்த முனிவர்களைத் தாக்கினான் அரக்கனான அமருவா. தங்களைக் காப்பாற்றும்படி பார்வதியிடம் அவர்கள் சரணடைந்தனர். அவளும் காத்தருள்வதாக வாக்களித்தாள். ஆனால் தன் மாயா சக்தியால் ஒரு பசுவின் வயிற்றில் போய் ஒளிந்தான் அரக்கன்.

அவன் எங்கு மறைந்தான் என பார்வதி தேடி அலைந்தாள். அப்போது அவளின் வியர்வை பூமியில் சிந்தியது. அதில் இருந்து ஐந்து வயது சிறுமி தோன்றினாள். அவளே பசுவின் வயிற்றில் மறைந்திருந்த மாயசக்தி கொண்ட அரக்கனை வதம் செய்தாள். அவளே இங்கு 'மெல்டி மாதா' என்னும் பெயரில் கோயில் கொண்டாள்.

உயர்ந்த மேட்டுப்பகுதியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. 20 படிகள் ஏறினால் துாண்கள் தாங்கிய போர்டிகோ போன்ற முன்மண்டபம் நம்மை வரவேற்கிறது. அதையடுத்த மண்டபத்தில் கருநிற ஆட்டிக்குட்டியின் மீது ஆசியளித்தபடி அமர்ந்த நிலையில் அம்மன் இருக்கிறாள்.

எட்டு கைகளில் கத்தி, சூலம் போன்ற ஆயுதங்கள் உள்ளன. இருபுறமும் திரிசூலங்கள் உள்ளன. சிறுமியாகத் தோன்றி அரக்கனைக் கொன்ற ஓவியம் இங்கு இடம் பெற்றுள்ளது. கோயில் கோபுரம் குஜராத் பாணியில் கூம்பு வடிவில் காட்சி தருகிறது. அம்மனின் முன்பு தேங்காய்களை வைத்து விருப்பம் நிறைவேற வேண்டுகின்றனர்.

வசந்த நவராத்திரி (மார்ச்), சாரதா நவராத்திரி (அக்டோபர்) விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

எப்படி செல்வது: சூரத் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 10 கி.மீ.,

விசேஷ நாள்: நவராத்திரி, தீபாவளி.

நேரம்: அதிகாலை 5:00 - இரவு 9:00 மணி

தொடர்புக்கு: 98249 58533

அருகிலுள்ள கோயில்: அம்பிகா நிகேதா கோயில் (நிம்மதிக்கு...)

நேரம்: அதிகாலை 5:00 - இரவு 9:00 மணி

தொடர்புக்கு: 02612 - 226 600






      Dinamalar
      Follow us