sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தீபாவளி கோயில்

/

தீபாவளி கோயில்

தீபாவளி கோயில்

தீபாவளி கோயில்


ADDED : நவ 10, 2023 10:39 AM

Google News

ADDED : நவ 10, 2023 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன், பெருமாள், அம்மன் கோயில்களில் தினசரி ஆறுகால பூஜைகள் நடக்கும். சூரிய, சந்திர கிரகணங்கள் பிடித்தால் கூட அந்த நேரத்தில் நடையை சாற்றி விட்டு பின்னர் கோயில் நடையை திறந்து பூஜைகளை நடத்துவர்.

சபரிமலையில் கூட தமிழ் மாத பிறப்பின் முதல் ஐந்து நாட்கள் சன்னதி திறக்கப்படும். ஆனால் புராதன காலம் தொடங்கி தீபாவளியை யொட்டி மூன்று நாட்கள் மட்டும் நடை திறக்கும் கோயில் கர்நாடகா கால்கட்சி அருகே டபகடா ஹோனி ஹல்லியில் உள்ளது.

கம்சனின் சகோதரி தேவகி. இவளை வசுதேவருக்கு கம்சன் திருமணம் செய்து கொடுத்தான். ஒருநாள் தம்பதியினர் இருவரையும் கம்சன் தனது தேரில் ஏற்றி அழைத்து சென்றான்.

அப்போது வானில் அசரீரி ஒன்று கேட்டது. கம்சா... உன் சகோதரிக்கு பிறக்கும் 8 வது குழந்தை உன்னை கொல்லும் என்று ஒலித்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவன் இருவரையும் சிறையில் அடைத்தான். அங்கு தேவகிக்கு பிறந்த 7 குழந்தைகளையும் அழித்தான். இந்நிலையில் எட்டாவது முறையாகவும் கர்ப்பம் அடைந்தாள் தேவகி. அதே சமயத்தில் வசுதேவரின் நண்பர் நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பம் அடைந்தாள். ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி அன்று தேவகிக்கு ஆண் குழந்தையும், யசோதாவுக்கு பெண்குழந்தையும் பிறந்தனர்.

அப்போது சிறையில் இருந்த வசுதேவர் முன்பு மகாவிஷ்ணு தோன்றினார். இந்த ஆண் குழந்தையை கோகுலத்தில் உள்ள யாசோதை வீட்டில் விடு. அங்குள்ள பெண் குழந்தை இங்கு கொண்டு வந்து வை என உத்தரவிட்டார். சிறையில் இருந்த பெண் குழந்தையை (துர்கை) கொல்ல வந்த கம்சனை பார்த்து எக்காளமிட்டு சிரித்தது. அப்போது அந்த குழந்தை உன்னை கொல்ல இருப்பவர் கோகுலத்தில் வளர்கிறார் என கூறி மாயமாய் மறைந்தது. பல ஆண்டுகளுக்கு முன் இங்குள்ளவர்கள் அந்த அம்மனுக்கு பீடம் அமைத்து வழிபட்டனர். பின்னர் வீட்டின் அமைப்பின் படி கோயில் கட்டியுள்ளனர்.

அம்மனுக்கு மாயம்மா, மகாமாயா, கோலலம்மா என்று பெயர். தீபாவளிக்கு முன், பின் என மூன்று நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கிருந்து மண் எடுத்து பலரும் மாயம்மாவிற்கு கோயில் கட்டியுள்ளனர்.வாழ்க்கையில் நல்லது நடந்து நினைத்தது பலித்தவர்கள் இக்கோயிலில் நேர்த்திக்கடனை குடும்பத்துடன் வந்து செலுத்துகிறார்.

எப்படி செல்வது: தார்வாத்தில் இருந்து கால்கட்சி வழியாக 35 கி.மீ.,

விசேஷ நாள்: தீபாவளி உட்பட முன்று நாள்

நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி

அருகிலுள்ள தலம்: நுக்கிகெரி அனுமன் கோயில் 1 கி.மீ., (ஆத்ம பலம் பெருகும்)

நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி

தொடர்புக்கு: 0836 - 246 0983






      Dinamalar
      Follow us