sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வேலை வணங்குவதே வேலை

/

வேலை வணங்குவதே வேலை

வேலை வணங்குவதே வேலை

வேலை வணங்குவதே வேலை


ADDED : நவ 17, 2023 01:32 PM

Google News

ADDED : நவ 17, 2023 01:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு பின்வரும் ஆறு நாள்களில் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிப்பர்.'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பார்கள். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அகமாகிய வயிற்றில் குழந்தைப்பேறு உண்டாகும்.

தெய்வத்தை போற்றுவது போலத் கடவுளின் ஆயுதம், வாகனம், கொடி இவற்றையும் துதி செய்தல் மரபு. பெருமாளின் ஐந்தாயுதங்களுக்கும், அவருடைய வாகனமாகிய கருடனுக்கும் பாடல்கள் உள்ளது. அது போல திருமாலின் மருமகன் முருகனின் வாகனமாகிய மயில், கொடியாகிய சேவல், ஆயுதமாகிய வேல் மூன்றிற்கும் அடியார்களான அருணகிரிநாதர், வண்ணச்சரப தண்டபாணி சுவாமிகள், தணிகைமலை கந்தப்பையர் துதிப் பாடல்களை இயற்றியுள்ளனர். (ஆடும்பரி வேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்பது கந்தர் அநுபூதி) முருகன் கோயில் கொண்டிருக்கும் தலங்களில் ''வேல் வேல்... வெற்றி வேல்... முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என்ற கோஷம்கானம் கேட்டுக் கொண்டே இருக்கும். முருகன் என்றால் வேல். வேல் என்றால் முருகன் என்றே சொல்வர்.

வேலின் உயரம் நீண்டும் அதன் முகம் அகன்று அதன் உச்சிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். அதைப்போல ஒருவருக்கு புத்தியானது ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம்.

இந்த வேலின் சிறப்பினை ''தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க்கரத்திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை'' என திருச்சிராப்பள்ளி செவ்வந்தி புராணம் போற்றுகிறது. பழங்காலத்தில் வேல் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததை புறநானுாறு, பரிபாடல், கந்தபுராணம் போன்றவற்றில் காணலாம். தற்போது இலங்கை கண்டி கதிர்காமத்திலும், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கதிரேசன்மலையிலும் வேலே மூலஸ்தான மூர்த்தியாக இருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில் தினந்தோறும் வேலிற்கே அபிஷேகம் நடைபெறும்.

முருகனடியார்களில் ஒருவரான பாலன் தேவராய சுவாமிகள் முருகனை நினைத்து உள்ளம் உருகி பாடியது சத்ரு சம்கார வேல் பதிகம். இதை அனைவரும் பாராயணம் செய்ய வேண்டியது அவசியம். வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட தடை, துன்பம் வந்தாலும் அத்தனையையும் அறுத்தெறிந்து நம்பியவர்களை காத்து நலமடைய வைக்கும் அபூர்வ பதிகம் இது.

ஒரு மண்டலமாகிய 48 நாட்கள் இதை உள்ள முருக பாராயணம் செய்தால் முருகனே குருவாக வருவார் என்பது சுவாமிகளின் வாக்கு. இதை தினந்தோறும் இரு வேளை 6 முறை பாடுதல் சிறப்பு. இதை பாராயணம் செய்து வந்தால் தீவினை, எதிரிகள் அகலுவர்.

வஞ்சகர், கண்ணுக்கு தெரிந்த, மறைமுக எதிரிகளும் நடுங்குவர். தீராத நோய்களும் தீரும்.

சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி

கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி

தண் மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி

விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி

அப்பமுடன் அதிரசம் பொறிக் கடலை

துவரை வடை அமுது செய் இபமுகவனும்,

ஆதி கேசவன் லட்சுமி திங்கள்

தினகரன் ஐராவதம் வாழ்கவே.

முப்பத்து முக்கோடி வானவர்கள்

இடர் தீர முழுது பொன்னுலகம் வாழ்க

மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும்

முது மறைக் கிழவர் வாழ்க.

செப்பரிய இந்திரன் தேவி அயிராணி தன்

திருமங்கலம் வாழ்கவே

சித்த வித்யாதரர் கின்னரர்கள்

கனமான தேவதைகள் முழுதும் வாழ்க.

சப்த கலை விந்துக்கும் ஆதியாம் அதி ரூப

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே.






      Dinamalar
      Follow us