
குழந்தைகளின் எதிர்காலம் பற்றி பெற்றோர் சிந்திக்கும் நேரம் இது. அவர்களுக்கு வரம் தரக் காத்திருக்கிறார் செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் பரசுராமேஸ்வரர். இவரை தரிசித்தால் படிப்பில் நம்பர் ஒன்னாக திகழ்வர்.
'தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்பார்கள்.
சான்றோர் பலர் அவதரித்த புண்ணிய பூமி இது. முல்லைக் காடான இப்பகுதி முல்லைப்பாக்கம் எனப்பட்டது. தற்போது முள்ளிப்பாக்கம் என்றாகி விட்டது. எங்கும் வயலும், நீரும் நிறைந்திருப்பதால் பச்சைப்பசேல் என இருக்கிறது. ஞானம் பெற விரும்பிய பரசுராமர் இங்குதான் சிவபெருமானை வழிபட்டு பலன் பெற்றார்.
முனிவரான ஜமதக்னிக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பரசுராமர். ராமாயணத்தில் ஸ்ரீராமருக்கும், மகாபாரதத்தில் கர்ணனுக்கும் குருவாக இருந்தவர்.
இவரது பெயரால் சுவாமி 'பரசுராமேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அம்மன் ஞானாம்பிகை தெற்கு நோக்கி இருக்கிறாள். புதனன்று காலை 6:00 -7:00 மணிக்குள் புதன் ஹோரையில் சுவாமிக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, வெண் பொங்கலிட்டு வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.
ஞாயிறன்று ஞானாம்பிகைக்கு வெள்ளை அரளிப்பூ மாலை சூட்டி தயிர் சாதம் படைத்தால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
இக்கோயிலில் கன்னிமூலை கணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியபகவானுக்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது
செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் 16 கி.மீ.,
விசேஷ நாள்: ஞாயிறு, பிரதோஷம், மகாசிவராத்திரி.
நேரம்: காலை 7:00 - 9:00 மணி; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 94453 07657, 86104 54501, 99942 15204
அருகிலுள்ள தலம்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் 18 கி.மீ., (செவ்வாய் தோஷம் தீர...)
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மதியம் 3:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 044 - 2744 6226