தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தடை தகர்ப்பவர்

தடை தகர்ப்பவர்

தடை தகர்ப்பவர்


ADDED : ஜூன் 14, 2024 01:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 01:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறையில் உள்ள கூறைநாட்டில் அமைந்திருக்கும் விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று தரிசித்தால் தடைகள் தகரும்.

காவிரி ஆற்றின் தென்கரையில் இருக்கும் இவர், வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்ததால் 'காக்கும் பிள்ளையார்' என அழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கிய கருவறையில் மூன்றடி உயர விநாயகர் கம்பீரமாக காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் உள்ள வில்வ மரத்துடன் சேர்த்து சன்னதியை 108 முறை வலம் வந்தால் திருமண யோகம் உண்டாகும்.

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது.

முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளன. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், குழந்தைப்பேறு என வேண்டுதல் நிறைவேற கீழே உள்ள ஸ்லோகத்தை சொல்லியபடி சுற்றுகின்றனர்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வணங்கப்படுபவரே! விளாம்பழம், நாவல்பழங்களின் சாற்றினை விரும்பி உண்பவரே! உமையவளின் மகனே! கவலையைப் போக்குபவரே! விக்னேஸ்வரரே உம் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்.

இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடக்கிறது.

எப்படி செல்வது: மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 2 கி.மீ.,

விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, அனுமன் ஜெயந்தி.

நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 99404 20095, 94451 03666

அருகிலுள்ள தலம்: இந்தளூர் பரிமள ரங்கநாதர் 2 கி.மீ., (மனபலம் அதிகரிக்க...)

நேரம்: காலை 6:00 -- 11:30 மணி; மாலை 5:00 - - 8:30 மணி

தொடர்புக்கு: 04364 - 223 330

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us