sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நாக தோஷமா...

/

நாக தோஷமா...

நாக தோஷமா...

நாக தோஷமா...


ADDED : ஜூன் 14, 2024 01:25 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் எமதர்மனின் உதவியாளரான சித்ரகுப்தர் பதிவு செய்வார். அது நல்லதாக இருந்தால் புண்ணியம், கெட்டதாக இருந்தால் தோஷமாக மாறி மறுபிறவியில் பலன் தரும். அதிலும் நாக தோஷமாக இருந்தால் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதைப் போக்கும் சிவன் செங்கல்பட்டு மாவட்டம் மேலையூரில் நாகபரணீஸ்வரர் என்னும் பெயரில் இருக்கிறார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப்பெருமாளின் சன்னதியும் சரஸ்வதியுடன் பிரம்மாவின் சன்னதியும் உள்ளன. இங்கு மும்மூர்த்திகள் இருப்பது சிறப்பு.

கோயிலுக்குள் நுழைந்தால் நம் மனம் பிரமிப்பில் ஆழ்ந்து விடும். அந்த பிரமிப்பே ஒவ்வொரு சன்னதிகளாக கைபிடித்து உங்களை அழைத்துச் செல்லும். காரணம் என்ன தெரியுமா?

ராதா, ருக்மணியுடன் கிருஷ்ணர், வலம்புரி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், மகாலட்சுமி, சித்ர குப்தர் என பல சன்னதிகள் உள்ளன.

ராகு காலத்தின் போது வில்வார்ச்சனை செய்தால் நாக தோஷம் தீரும். அதோடு பெரிய நாயகி அம்மனை வலம் வந்து 'இனி தாத்தா, பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்வேன்' என வாக்கு அளியுங்கள். அப்படி செய்தால் ராகு, கேதுவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

இத்தலத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு. அபிேஷகத்தின் போது மூலவர் சிலை சற்று சாய்வாக இருப்பதை காண முடியும். இங்கு புளியமரம் தல விருட்சமாக உள்ளது.

எப்படி செல்வது: செங்கல்பட்டு - திருப்போரூர் சாலை வழியாக 17 கி.மீ.,

விசேஷ நாள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மகாசிவராத்திரி.

நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 4:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 96298 23486, 73059 27989

அருகிலுள்ள தலம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் கோயில் 36 கி.மீ., (தோல் நோய் தீர...)

நேரம்: காலை 7:30 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 98429 09880, 93814 82008






      Dinamalar
      Follow us