/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ? - ஜன.12 விவேகானந்தர் பிறந்தநாள்
/
எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ? - ஜன.12 விவேகானந்தர் பிறந்தநாள்
எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ? - ஜன.12 விவேகானந்தர் பிறந்தநாள்
எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ? - ஜன.12 விவேகானந்தர் பிறந்தநாள்
ADDED : ஜன 07, 2011 04:23 PM

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்துவிடும்.
* மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர் களையும்விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை.
* லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்.
* கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.
* முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் தானாவே வந்துசேரும்.
* உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் ஆன்மிகவாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
* உள்ளத்தூய்மையும், மனவலிமையும் உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம்.
* உள்ள உறுதியோடு இருங்கள். அதற்கு மேலாக மனத்தூய்மையும், முழு அளவில் சிரத்தை உள்ளவராகவும்
இருங்கள்.
* பிறருடைய நன்மையைச் சிறிது நினைத்தாலும் கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றல் நம்மிடம் இதயம் பெற்றுவிடும்.
* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.
* ஒருகாலத்தில் நீங்களே வேதகால ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது வேறுவடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.
* தைரியமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்லுங்கள். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளராக இருங்கள்.
* சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் இந்த உலகையே ஆட்டி வைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
* நீங்கள் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகள். அதனால் எதற்கும் அஞ்சிவிட மாட்டீர்கள். சிங்கக்குட்டிகளைப் போலத் திகழ்வீர்கள்.
* ஓய்வு ஒழிவு இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், அந்த வேலைகளில் கட்டுப்பட்டு விடாதீர்கள். அதற்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
* நீங்கள் ஒரு எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும். அடிமையைப் போல அல்ல. சுதந்திரமாகவும், அன்போடும் கடமைகளைச் செய்யுங்கள்.
* அன்பின் அடிப்படையிலும், அன்பின் மூலமாகவும் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மனஒருமைப்பாடு ஆகும்.