ADDED : அக் 23, 2019 03:00 PM

* யாருக்கும் தெரியாது என எண்ணி பிறருக்கு துரோகம் செய்யாதே. மனசாட்சிக்கு மதிப்பு கொடு. வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
* தாயை நம்பும் குழந்தை போல, மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால், அவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
* கீழான ஆசைகள் மனதில் எழுவதை எண்ணி வருந்த வேண்டாம். கடவுளைச் சரணடைய பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும்.
* படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகில் இருக்கக் கூடாது. அது போல, ஆசைகள் மனதிற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* கோபத்தில் அறிவு, தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்வதால் நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறன் இல்லாமல் போகும்.
* உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக வாழ்வது கூடாது. சொல்லும், செயலும் ஒற்றுமை காண்பதே நல்லவனின் அடையாளம்.
* பெற்றோருக்கு சேவை செய்வது நம் கடமை. அவர்களைத் திருப்திபடுத்தாமல் வழிபாடு, தானம் செய்வதில் பலனில்லை.
* சூரிய உதயத்திற்கு முன்பு வெண்ணெய் கடைவது போல இளமைக்காலமே ஆன்மிகத் தேடலுக்கு ஏற்றது.
* ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே, மனதை அடக்குபவனே உண்மை வீரன்.
* பெண்களை உன் தாயாக கருது. அவர்களின் பாதங்களை மட்டும் பார். பாவ எண்ணம் தோன்றாது.
* மற்றவர் குறைகளை பற்றி பேச விரும்புபவன், விலைமதிப்பற்ற காலத்தை வீணாக்குகிறான்.
* கடவுளை வெளியில் தேடாதே. உனக்குள்ளே அவர் இருப்பதை உணர். அதுதான் ஞானம்
சொல்கிறார் ராமகிருஷ்ணர்