ADDED : மார் 20, 2020 10:32 AM

* நல்ல செயலில் ஈடுபடும் போது கிடைக்கும் மனநிறைவே மகிழ்ச்சி தரும்.
* கடமையைச் சரியாகச் செய்பவர்களால் மட்டுமே கடவுள் மீது துாயபக்தி செலுத்த முடியும்.
* இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தலாம்.
* எந்த நிலையிலும் கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்றவர்.
* தேவையான இடத்திலும், நேரத்திலும் கோபமாக நடிக்கலாம். ஆனால் ஆழ்மனதில் அமைதி நிலவ வேண்டும்.
* மனதில் உறுதியும், செயலில் ஒழுக்கமும் இருந்தால் நினைத்தது எளிதில் நிறைவேறும்.
* சுகபோகத்தில் வாழ்பவனை விட துன்பத்தில் உழல்பவனின் அனுபவம் மதிப்பு மிக்கது.
* உழைப்பால் உடலும், உள்ளமும், சமுதாயமும் பலம் பெறுகிறது.
* உண்மையும் நேர்மையும் கொண்டவன், துன்பத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை.
* ஆசையின் இயல்பை அறிந்து அதை சீர்படுத்துங்கள். அதன் பின்னர் வாழ்வே ஆனந்த மயமாகும்.
* பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழ்வு உருண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் 'நான் யார்' என்பதற்கு விடை தேடுங்கள்.
* கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகி விடும்.
* உள்ளத்தில் கருணையும், உடையில் ஒழுக்கமும், நடையில் கண்ணியமும் பின்பற்றுங்கள்.
* கடமையுணர்வுடன் பணியாற்றினால் மட்டுமே ஒருவரின் உரிமையும் காக்கப்படும்.
மனம் திறக்கிறார் வேதாத்ரி