sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

18 படிகளில் வசிக்கும் தெய்வங்கள்!

/

18 படிகளில் வசிக்கும் தெய்வங்கள்!

18 படிகளில் வசிக்கும் தெய்வங்கள்!

18 படிகளில் வசிக்கும் தெய்வங்கள்!


ADDED : நவ 13, 2016 12:17 PM

Google News

ADDED : நவ 13, 2016 12:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பதினெட்டு படிகள் தெய்வீகமானவை. ஒவ்வொரு படியிலும் ஒரு தெய்வம் வசிப்பதாக ஐதீகம்.



1. நாகயட்சி - சாஸ்தாவின் பரிவார தெய்வமான இவளுக்கு குளத்துப்புழை, அச்சன்கோவிலில் சன்னிதி உள்ளது.

2. மகிஷாசுரமர்த்தினி - துர்க்கையம்மனின் அம்சமான இவள், மகிஷாசுரனை வதம் செய்து உலகை காத்தவள்.

3. அன்னபூர்ணா - அன்னதான பிரபுவான மணிகண்டன் தன் பக்தர்களுக்கு உணவளித்தால் மகிழ்வார். அந்த அன்னத்துக்கு அதிபதி இவள்.

4. காளி - படைத்தல், அழித்தலுக்கு இவள் அதிபதி. தன் பக்தனுக்கு அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்பாள்.

5. கிருஷ்ணகாளி - பயப்படச் செய்யும் உருவத்துடன் பக்தர்களின் பயத்தைப் போக்குபவள்.

6. சக்தி பைரவி - பார்வதி தேவியின் உக்ர வடிவம் கொண்டவள். யட்சி என்றும் பெயருண்டு. சபரிமலையில் சன்னிதி இருக்கிறது.

7. கார்த்தவீர்யாஜுனர் - இவர் தன் குருநாதரான தத்தாத்ரேயரின் வழிகாட்டுதல்படி, சாஸ்தா வழிபாட்டில் ஈடுபட்டவர்.

8. கிருஷ்நாபன் - கருப்பசுவாமி என்றும் பெயர் உண்டு. சாஸ்தாவின் பூதசேனை தலைவர் மற்றும் பாதுகாவலர்.

9. இடும்பன் - அசுர குலத்தைச் சேர்ந்த இவர் அவர்களின் தலைமை குருவாகவும், போர்வீரராகவும் திகழ்ந்தவர். முருகன் அருள் பெற்றவர்.

10. வேதாளம் - பேய், பூதங்களின் தலைவர். பைரவ அம்சம் கொண்டவர். சாஸ்தாவின் பரிவார தெய்வம்.

11. நாகராஜா - நாகங்களின் தலைவர். இவரை வழிபட்டால் சர்ப்பதோஷம் விலகும்.

12. ரேணுகா தேவி - சபரிமலை கோவில் கட்டிய பரசுராமரின் தாய். ரேவண சித்தரிடம் ஐயப்ப மந்திரத்தை உபதேசமாகப் பெற்றவள்.

13. ஸ்வப்ன வராகி - ஐயப்ப பக்தர்களின் கனவில் தோன்றி அவர்களுக்கு நல்வழி காட்டுபவள்

14. பிரத்யங்கிராதேவி - காளியை விட உக்ர தெய்வம். பக்தர்களைக் காப்பதில் தன்னிகரற்றவள்.

15. பூமாதேவி - வராகப்பெருமாளின் மனைவி. நெற்கதிர் ஏந்திய இவள் வளமான வாழ்வு தருபவள்.

16. அகோரம் - அழகானவர். அஸ்திர தேவர் என்றும் பெயருண்டு. ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு தருபவர்.

17. பாசுபதம் - சிவபெருமானின் வில். பகைவர்களை அழிக்கும் சக்தி கொண்டது.

18. மிருத்யுஞ்ஜயம் - சிவனின் ஆயுதம். விரும்பியதை அடையச் செய்யும். உடல்நலம் கொடுக்கும். பக்தனை தெய்வநிலைக்கு உயர்த்தும்.






      Dinamalar
      Follow us