/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மூணுகோடி நாள் விரதத்தை ஒரே நாளில் இருங்க!
/
மூணுகோடி நாள் விரதத்தை ஒரே நாளில் இருங்க!
ADDED : மார் 01, 2016 12:23 PM

சிவராத்திரி என்றால் அதை மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியை மட்டுமே குறிக்கும் என கருதுகிறார்கள். உண்மையில், மாதத்திற்கு ஒரு சிவராத்திரி வரும். இதை மாத சிவராத்திரி என்பர். இதுதவிர பட்சராத்திரி, யோக சிவராத்திரி ஆகியவையும் வருகின்றன. அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து 15 நாட்கள் தொடர்ந்து வருவது பட்ச சிவராத்திரி எனப்படும். இந்த நாட்களில் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று பகலில் சாப்பிடாமலும், இரவில் கண்விழித்தும் விரதம் இருந்து மறுநாள் அமாவாசையன்று விரதத்தை முடிப்பது பட்ச சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி: 24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகையாகப் பிரித்தார்கள். ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். 60 நாழிகைக்கு 1440 நிமிடம். ஒருநாளுக்கு 1440 நிமிடம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* இதில் சூரிய உதயம் முதல் இரவு வரை அமாவாசை திதி இருந்தால் அந்தநாள் யோக சிவராத்திரி.
* இதுபோல திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரி தான்.
* திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் (அதிகாலை பொழுது) அமாவாசை திதி அரை நாழிகை (12 நிமிடம்) இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படும். சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.
* யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால் அது மூன்று கோடி மகா சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி விரதங்களை அனுஷ்டித்ததற்கு சமமாக இருக்கும்.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தியநாள் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினம் மாத சிவராத்திரியாக இருக்கும்.
மகா சிவராத்திரி : மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி தினம் மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம்
யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காக்கும் சிவனுக்காக ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி இது.

