ADDED : மார் 05, 2021 05:31 PM

* புகழ், கவர்ச்சிக்காக யாரும் பொதுவாழ்வில் ஈடுபடக் கூடாது.
* விருப்பு, வெறுப்பு இன்றி கண்ணியமுடன் செயல்பட்டால் வாழ்வு சிறக்கும்.
* மிருக நிலையில் இருந்து பண்பட்ட நிலையை அடைவதே மதத்தின் நோக்கம்.
* உண்மையான கல்வி என்பது இரண்டாவது பிறப்புக்கு சமமானது.
* மனதை ஒழுங்குபடுத்தி அதில் நல்லதை விதைப்பதே ஆன்மிகம்.
* பாரத பண்பாடு என்பது ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
* அறியாமையை போக்கி அறிவும், அனுபவமும் ஒருசேர கிடைப்பதே ஞானம்.
* பள்ளியிலிருந்து கல்லுாரி வரை ஆன்மிகக் கல்வியை போதிப்பது அவசியம்.
* கட்டுப்பாடான முயற்சி, கடும் உழைப்பு இருந்தால் குறிக்கோளை அடையலாம்.
* பிறரிடம் அன்பும், சகிப்புத்தன்மையும் காட்ட வேண்டுமேயன்றி பழி வாங்க கூடாது.
* புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும் மனதில் உள்ள வறுமை அபாயமானது.
* சில நேரங்களில் பேசுவதை விட, அமைதியாக இருப்பதே பயனளிக்கும்.
* அறிவுநுால்களைப் படித்தாலும் ஞானம் இல்லாவிட்டால் அனைத்தும் வீணாகும்.
* முயற்சியும், கடவுளின் அருளும் இருந்தால் மட்டுமே ஒரு செயல் நிறைவேறும்.
எச்சரிக்கிறார் ராதாகிருஷ்ணன்