ADDED : ஆக 17, 2018 03:10 PM

* கல்வி என்பது மனித வாழ்வில் இரண்டாவது பிறப்பு போன்றது.
* மனிதத்தன்மை நிறைவு பெறும் நிலைக்கு பெயரே மதம்.
* மதம் என்பது உள்ளுணர்வில் எழும் ஒரு மாறுதல், மனதில் ஏற்படும் புரட்சி, தெளிவின் விளக்கநிலை.
* அறிவுத்திறமை, மக்களின் வாழ்வியல் சூழல் குறித்த தெளிவு இரண்டும் ஆசிரியர்களுக்கு அவசியமானவை.
* புத்தகம் எழுதும் ஆசிரியருக்கு மனக்கட்டுப்பாடு, உணர்ச்சி வெளிப்பாடு இரண்டும் வேண்டும்.
* மாணவர்களுக்கு கல்லுாரி வரை ஆன்மிகக் கல்வி அவசியம் கற்றுத்தரப்பட வேண்டும்.
* ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட்டால் கல்வி நிறுவனங்களின் நிலை உயர்வு பெறும்.
* விஞ்ஞானம் இல்லாத சமயம் மூடத்தனமாகி விடும். சமயம் இல்லாத விஞ்ஞானம் ஆணவத்திற்கு வழிவகுக்கும்.
* மனிதன் அறிவு தேடுவதோடு இதயப்பூர்வமாக கடவுளையும் தேட வேண்டும்.
* உணவுக்கு ஏற்ப மனிதனின் இயல்பு மாறும். சமுதாயத்தின் பண்பை உருவாக்குவதில் உணவின் பங்கு அதிகம்.
* பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் அதை கவர்ச்சி மிக்க பலன்களை மட்டுமே கருத்தில் கொள்ளக் கூடாது.
அறிவுறுத்துகிறார் ராதாகிருஷ்ணன்