sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சுகப்பிரம்மருக்கு ஆடியில் திருவிழா!

/

சுகப்பிரம்மருக்கு ஆடியில் திருவிழா!

சுகப்பிரம்மருக்கு ஆடியில் திருவிழா!

சுகப்பிரம்மருக்கு ஆடியில் திருவிழா!


ADDED : ஜூலை 20, 2012 12:57 PM

Google News

ADDED : ஜூலை 20, 2012 12:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசரின் மகனும், வேதங்களைக் கரைத்துக் குடித்தவரும், கிளிமுகம் கொண்டவருமான சுகப்பிரம்மருக்கு ஆடிமாதம் கடைசி நாளில், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் விழா நடக்கும். அன்று சுகப்பிரம்மர் உலா வருவார்.

தல வரலாறு: ஒரு சாபத்தால் மரங்களாகத் தோன்றிய வேதங்கள், நிவர்த்திக்காக சிவனை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தன. அவற்றுக்கு காட்சி தந்த சிவன் லிங்கமாக இங்கு எழுந்தருளினார். காலப்போக்கில் லிங்கத்தைச் சுற்றி புற்று வளர்ந்து விட்டது. கிளி வடிவில் சுகப்பிரம்ம மகரிஷி இங்கு தங்கி சிவனை பூஜித்தார். ஒருசமயம் இவ்வழியே வந்த வேடன் ஒருவன் புற்றுக்குள் லிங்கம் இருப்பதை அறியாமல், அதை மிதிக்கச் சென்றான். சுகப்பிரம்மர் பறந்து வந்து அவனைத் தடுத்தார். வேடன் கிளியின் மீது வாளை வீசினான். அது புற்றின் மீது பட்டு லிங்கம் வெளிப்பட்டது. சிவன், சுகப்பிரம்மருக்கும், வேடனுக்கும் காட்சி தந்தார். சுகப்பிரம்மரின் பெயரால், 'சுகவனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

கைலாயம் சேர்த்த கணபதி: அவ்வையார் விநாயகரை பூஜித்துக் கொண்டிருந்தபோது, சுந்தரரும், அவரது நண்பரான சேரமான் பெருமானும் சிவனைக்காண கைலாயம் சென்று கொண்டிருந்தனர். அவ்வையார், தானும் கைலாயம் செல்ல வேண்டுமென நினைத்து பூஜையை வேகமாகச் செய்தார். அவர்முன் தோன்றிய விநாயகர், பூஜையை நிதானமாக செய்யும்படியும், அவ்விருவருக்கு முன்பாக அவரைக் கைலாயம் கூட்டிச்செல்வதாகவும் கூறினார். மகிழ்ந்த அவ்வையார் விநாயகரைப் போற்றி பாடல் பாடினார். இதுவே, 'சீதக்களப செந்தாமரைப்பூம்' என்று துவங்கும் 'விநாயகர் அகவல்'. அவ்வையார் பாடி முடித்ததும், விநாயகர் அவரை தும்பிக்கையால் தூக்கி கைலாயம் கொண்டு சேர்த்தார். இங்கு ஒரே சந்நிதியில் அவ்வை பூஜித்த விநாயகரும், அவரை கைலாயம் கொண்டு சேர்த்த விநாயகர் விஸ்வரூப கோலத்திலும் காட்சி தருகின்றனர். இவர்களை வழிபட பிறவாநிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி சுவாதியன்று இந்த விழா நடக்கும்.

செவ்வாய் தோஷ பரிகாரம்: செவ்வாய் தோஷமுள்ள ஆண்களுக்கான பரிகாரத் தலம் இது. பிரகாரத்தில் மதில் சுவரிலுள்ள ஒரு துளைக்குள் க்ஷிப்ர கணபதி இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ள ஆண்கள், செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை 6- 7.30 மணி) இவருக்கு பால், தேன், இளநீர், மஞ்சள், குங்குமம் மற்றும் அரிசி சேர்த்து தயாரிக்கப்படும் செம்பாலை என்னும் திரவியத்தால் அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் மற்றும் செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். பிரம்மச்சாரிகளுக்கு ஆடைதானம் வழங்குகிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

33 விநாயகர்கள்: இக்கோயிலுக்குள் 33 விநாயகர்கள் உள்ளனர். மகா சங்கடஹரசதுர்த்தியன்று (விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சதுர்த்தி) ஒருநாள் மட்டும் இவர்கள் அனைவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க, அவர்களின் பிறந்த நட்சத்திரத்தன்று இங்குள்ள விகடகர விநாயகருக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இங்குள்ள அமண்டுக தீர்த்தக்கரை சந்நிதியில் சுகவன கணபதி இருக்கிறார்.

நாகதோஷ நிவர்த்தி: சில கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேல் ஐந்து தலை நாகம் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு ஏழு தலை நாகம் இருக்கிறது. ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வாறு வைத்துள்ளனர். நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கின்றனர். அமாவாசை நாட்களில் சுவாமியும், பூரம் நட்சத்திர நாட்களில் அம்பிகையும் புறப்பாடாவர்.இங்குள்ள சரஸ்வதிசந்நிதிசிறப்பு வா#ந்தது.

சுகப்பிரசவ வழிபாடு: இத்தலத்து சொர்ணாம்பிகையை கர்ப்பிணிப்பெண்கள் சுகப்பிரசவம் ஆக, வீட்டிலிருந்தபடியே வணங்கி, வளைகாப்பின்போது வளையல் எடுத்து வைக்கின்றனர். பிரசவம் ஆனதும், அதை இவளது சந்நிதியில் கட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தாமரை முருகன்: பிரணவ மந்திரமான ஓம் வடிவில் அமைந்த கோயில் இது. இங்குள்ள சுகவன சுப்பிரமணியருக்கு மயில் வாகனம் கிடையாது. இவர் இரண்டு கைகளிலும் தாமரை மொட்டு வைத்துள்ளார். முருகனுக்குரிய வடிவங்களில் குமார வடிவம் இது.

சுகப்பிரம்மர் பூஜை: கோயில் முன்மண்டபத்தில் சுகப்பிரம்மரும், அவரது தந்தை வியாசரும் இருக்கிறார். ஆடி கடைசிநாளன்று சுகப்பிரம்மருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுகப்பிரம்ம உற்சவர் பவனி வருவார். பேச்சாற்றலும், சாதுர்யமாக செயலாற்றும் தன்மையும் வளர சுகப்பிரம்மரை வழிபடுகிறார்கள். இவ்வாண்டு ஆகஸ்ட் 16ல் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

நிம்மதியான தூக்கம்: 1947ல் கோயில் கும்பாபிஷேக திருப்பணி நடந்தபோது கிடைக்கப்பெற்ற ஜேஷ்டாதேவி சிலை, கஜலட்சுமி சந்நிதிக்கு பின்புறம் உள்ளது. இவள் தூக்கத்திற்கான தெய்வம் என்பதால், இரவில் சரிவர தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 9 - 10.30 மணிக்குள், இவளுக்கு எண்ணெய் காப்பு செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.

இருப்பிடம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்.

திறக்கும் நேரம்: காலை 6- 12, மாலை 4- 9.

போன்: 0427-245 0954, 245 2496.






      Dinamalar
      Follow us