sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மன்னிப்போம்! மறப்போம்!

/

மன்னிப்போம்! மறப்போம்!

மன்னிப்போம்! மறப்போம்!

மன்னிப்போம்! மறப்போம்!


ADDED : அக் 31, 2019 11:58 AM

Google News

ADDED : அக் 31, 2019 11:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மற்றவர்களின் குற்றங்களை மன்னிப்பது மனிதத்தன்மை. மறப்பது தெய்வத்தன்மை. பக்தியால் இந்த இரண்டையும் பெற முடியும்.

* இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அமைதியுடன் வாழ முடியும்.

* பசுக்கள், வேதங்கள், கற்பு நெறி தவறாதவர், சத்தியவழி நடப்பவர், துறவியர், தர்மசிந்தனை கொண்டவர் ஆகியோரால் தான் இந்த பூமி இடைவிடாமல் சுற்றுகிறது.

* நிலவால் இரவும், சூரியனால் பகலும் ஒளி பெறுகிறது. நல்ல பிள்ளைகளால் குடும்பம் ஒளி பெறுகிறது.

* ஒருவர் செய்த தர்மச்செயலால் மண்ணுலகமும், விண்ணுலகமும் ஒளி பெறும்.

* குணமுள்ள மனைவி, மழலை மாறாத குழந்தை, உழைப்பில் கிடைத்த செல்வம் ஆகியவை அமிர்தத்திற்கு ஈடானவை.

* பசிக்கு உணவும், தாகத்திற்கு தண்ணீரும் தரும் தானத்திற்கு இணை வேறில்லை.

* ஆறுமுறை பூமியை வலம் வருதல், பத்தாயிரம் முறை காசியில் நீராடல், நுாறு முறை ராமேஸ்வரத்தில் குளித்தல் போன்ற புண்ணிய பலன்கள், பெற்ற தாயை ஒருமுறை வணங்கினால் கிடைக்கும்.

* பாம்புக்கு பால் வார்த்தாலும் அது விஷம் தான் கொடுக்கும். கீழ்த்தரமான மனிதருக்கு உதவி செய்தாலும் தீமையே ஏற்படும். நல்லவர் நட்பால் மனதில் அமைதி உண்டாகும்.

* தவம் செய்ய காட்டுக்குப் போகவோ, பட்டினி கிடக்கவோ வேண்டாம். குடும்பத்தில் மனைவி, மக்களுடன் வாழ்வதே சிறந்த தவம் தான்.

* கீழ் நோக்கிப் பிடித்தாலும் தீப்பந்தம் மேல் நோக்கியே எரியும். அது போல உயர்ந்த மனம் படைத்தவர்கள் செல்வத்தில் தாழ்ந்தாலும் எண்ணத்தால் உயர்ந்து நிற்பர்.

வேண்டுகிறார் வாரியார்






      Dinamalar
      Follow us