sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உருவமில்லாத அம்பிகை

/

உருவமில்லாத அம்பிகை

உருவமில்லாத அம்பிகை

உருவமில்லாத அம்பிகை


ADDED : அக் 15, 2012 12:34 PM

Google News

ADDED : அக் 15, 2012 12:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகிஷாசுரனுடன் ஒன்பது நாள் போராடி வெற்றி பெற்ற அம்பாள், ஓய்வு எடுக்க சயனகோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன், கடற்கரை ஓரமாக காற்று வாங்க தங்கினாள். அவளது பெயரால் இந்த ஊர் 'தேவிபட்டினம்' என பெயர் பெற்றது. அம்பிகை கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்புவடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள். இவளை 'உலகநாயகி' என்ற திருநாமம் இட்டு அழைக்கின்றனர். இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது. அடையாளம் தெரிவதற்காக ஒரு முகத்தை மட்டும் வைத்துள்ளனர். அம்மனின் சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சி ராஜமாதங்கி சியாமள பீடம், காஞ்சி காமாட்சி காமகோடி பீடம், காசி விசாலாட்சி மணிகர்ணிகா பீடம் என்பது போல், தேவிபட்டினம் அம்மனின் வீரத்தை பறை சாற்றும் வகையில் வீரசக்தி பீடமாக உள்ளது. ராவண வதத்திற்கு முன் ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் இத்தலத்து அம்மனை வணங்கி ஆசி பெற்று சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

2000 ஆண்டு பழமையான இக்கோயில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. 5 நிலை 7 கலசத்துடன் கூடிய பிரமாண்டமான கோபுரமும், மூலவருக்கு மேல் ஏகதள விமானமும், கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தமும் இருக்கிறது. எடுத்த செயலில் வெற்றி பெற இத்தலத்து அம்பாளை வணங்கி வரலாம்.

இருப்பிடம்:

ராமநாதபுரத்திலிருந்து 14 கி.மீ. தூரத்திலுள்ள தேவிபட்டினம் காந்தி நகர் ஸ்டாப்பில் இறங்கி அரை கி.மீ. தூரம் சென்றால் கோயில்.

திறக்கும் நேரம்:

காலை 6 - இரவு 8 .

போன் :

94444 57971, 04567 - 221 213.

- சிவா






      Dinamalar
      Follow us