sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அன்பை வாரி வழங்குங்கள்

/

அன்பை வாரி வழங்குங்கள்

அன்பை வாரி வழங்குங்கள்

அன்பை வாரி வழங்குங்கள்


ADDED : நவ 17, 2017 10:40 AM

Google News

ADDED : நவ 17, 2017 10:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.23 - சாய்பாபா பிறந்த நாள்

* அனைவருக்கும் அன்பை வாரி வழங்குங்கள். பொறுமை உள்ளவனே சிறந்த மனிதன். சாதிக்க

முடியாததையும், பொறுமை சாதித்து காட்டும்.

* பிறர் பாராட்டும்போது பெருமிதமோ, திட்டும்போது வருத்தமோ கொள்ளாதீர்கள்.

* பக்தி தோன்றும்போது தான், சமூகம் முழுமை பெறுகிறது. ஒவ்வொருவரும் பக்தி என்னும் மாபெரும் சக்தியின் அங்கமாக இருக்கின்றனர்.

* வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில் பெருமை இருக்கும். அன்பு இருக்கும்இடத்தில் நிசப்தம் மட்டுமே இருக்கும்.

* இளமைப்பருவம் வாழ்வில் மிக முக்கியமான அங்கம். அவ்வேளையில் ஒருவனை சரியான வழிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உரியது.

* உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை தியானம் செய்வதற்கும், பிறருக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்துங்கள். அந்நேரத்தில் பயனற்ற செயல்களை செய்யாதீர்கள்.

* எதிர்பார்ப்பு, பேராசை பெரும் துன்பத்தை தரும். மனநிறைவுடன் வாழ இவ்விரண்டையும் விட்டுவிடுங்கள்.

* நாம் செய்யும் நற்செயல், தீய செயல்களுக்கேற்ப எதிர்காலத்தில் பலனையும் அனுபவிப்போம்.

* சாப்பிடும் உணவு உடலின் அனைத்து பகுதிக்கும் சக்தி தருவதுபோல, தனி மனித அமைதியே முழு உலகத்திற்கும் பரவி சக்தி கொடுக்கிறது.

* கடவுள் அனைவரிடமும் இருக்கிறார். எனவே நீங்கள் பிறருக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.

* நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்? இந்த மூன்று கேள்விக்கும் 'கடவுள்' என்ற ஒரு வார்த்தை மட்டுமே பதிலாக இருக்கும்.

* மனிதராகப் பிறந்தது, பக்தியின் மூலமாகஇறைவனை அடைவதற்காகத்தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

* அனைவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் மனிதரே நல்லறிவு கொண்டவர்.

* சேவை செய்வதன் மூலம், பிறர் மீது அன்பை வெளிப்படுத்துவதோடு, அதை பல இடங்களிலும் பரவவும் உதவுகிறோம்.

* கருத்தை வலியுறுத்தி சத்தமிடுவதால் பயனில்லை. வாதத்தை சரியாக வைத்தால் மட்டுமே கருத்தை நிலை நிறுத்த முடியும்.

* பசி போக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. வெறும் தத்துவங்கள் பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை.

* அமைதியாக இருப்பவர்களுக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இரண்டும் இல்லை. அவர்கள் எப்போதும் ஒரு நிலையிலேயே இருப்பர்.

வேண்டுகிறார் சாய்பாபா






      Dinamalar
      Follow us