sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனக்குறை தீர்ப்பாள் மாசாணி

/

மனக்குறை தீர்ப்பாள் மாசாணி

மனக்குறை தீர்ப்பாள் மாசாணி

மனக்குறை தீர்ப்பாள் மாசாணி


ADDED : மார் 09, 2018 11:57 AM

Google News

ADDED : மார் 09, 2018 11:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்டம் ஆனைமலையில் மாசாணியம்மன், சயனகோலத்தில் அருள்கிறாள். அமாவாசையன்று தரிசிக்க மனக்குறை தீரும்.

தல வரலாறு: நன்னன் என்னும் சிற்றரசன், அரண்மனை மாமரத்தின் பழங்களை, தன்னைத் தவிர மற்றவர் யாரும் சாப்பிட்டால் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்தான். ஒரு சமயம் மரத்தில் பழுத்த பழம் ஒன்று ஆற்றில் விழ, நீராடிய கர்ப்பிணி ஒருத்தி விஷயம் தெரியாமல் சாப்பிட்டாள். திருடியதாக குற்றம் சாட்டி மரண தண்டனை விதித்தான் அரசன். கர்ப்பிணி இறந்த சில நாட்களுக்குள், மன்னன் எதிரியால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்தான்.

வீரம் மிக்கவனாக இருந்தும், கர்ப்பிணிக்கு இழைத்த கொடுமையின் காரணமாக போரில் மன்னன் தோற்றதை உணர்ந்த மக்கள், தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். அவளை அடக்கம் செய்த உப்பாற்றின் வடகரை மயானத்தில் சயன நிலையில் சிலை வடித்தனர். 'மாசாணியம்மன்' என பெயர் பெற்றாள்.

ஸ்ரீசக்கரம்: 17 அடி நீளம் கொண்ட அம்மன் சிலையின் நெற்றியில் ஸ்ரீசக்கரம் உள்ளது. தெற்கில் தலை வைத்தபடி, கைகளில் கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி அருள்பாலிக்கிறாள். மனக்குறை நீங்க அமாவாசையன்று வழிபடுகின்றனர். விருப்பம் நிறைவேறியதும், அங்க பிரதட்சனம், முடிகாணிக்கை, குண்டம் இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரகாரத்தில் உள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து பூசினால் திருடு போன பொருள் கிடைக்கும். எதிரி பயம் நீங்கும்.

எப்படி செல்வது: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,யில் ஆனைமலை.

விசேஷ நாட்கள்: தை மாதத்தில் 18 நாள்

திருவிழா: அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமை,

நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 04253 - 282 337

அருகிலுள்ள தலம்: 34 கி.மீ.,யில் கிணத்துக்கடவு முருகன் கோயில்







      Dinamalar
      Follow us