sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கிரகதோஷம் நீக்கும் அனுமன்

/

கிரகதோஷம் நீக்கும் அனுமன்

கிரகதோஷம் நீக்கும் அனுமன்

கிரகதோஷம் நீக்கும் அனுமன்


ADDED : ஏப் 10, 2017 03:17 PM

Google News

ADDED : ஏப் 10, 2017 03:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அபயவரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கிரகதோஷம் நீங்க பக்தர்கள் சுவாமியின் வாலில் இளநீர் கட்டும் வழிபாட்டை செய்கின்றனர்.

தல வரலாறு

சிற்றரசர் ஒருவர், அனுமனை வழிபட்டு போரில் வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு கோவில் கட்ட விரும்பினார். மன்னரின் கனவில் தோன்றிய அனுமன், ஒரு மலையடிவாரத்தை காட்டி அங்கு கோவில் கட்ட அனுமதி தந்தார். சுவாமிக்கு, 'அபய வரத ஆஞ்சநேயர்' என பெயரிடப்பட்டது. உற்சவர் 'அஞ்சலி ஆஞ்சநேயர்' எனப்படுகிறார்.

இளநீர் வழிபாடு

கிரகதோஷ நிவர்த்தி பெற பக்தர்கள் ஆஞ்சநேயரின் வாலில் இளநீர் கட்டும் வழிபாடு செய்கின்றனர். இளநீரின் மேற்பகுதியில் பெயர், நட்சத்திரம் மற்றும்

ராசியைக் குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்தால், அதை ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுவார். அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். வாலில் இட்ட நெருப்பால், சீதைக்கு துன்பம் செய்தவர்களின் ஊரை எரித்தது போல, நமக்கு துன்பம் தரும் கிரகதோஷத்தை எரித்து விடுவார் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.

மார்பில் சிவலிங்கம்

அபயவரத ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தியுடன் போர்க்கோலத்தில் காட்சியளிக்கிறார். நினைத்தது நிறைவேற பக்தர்கள் இவருக்கு வெற்றிலை, வடை மாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தலவிருட்சமான பலாவின் கீழ் ராமலிங்க சுவாமி வீற்றிருக்கிறார். பவுர்ணமி மற்றும் பிரதோஷத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவருக்கு பின்புறம் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. இங்குள்ள அனுமன் தீர்த்த நீரை தலையில் தெளித்தால் நோய்கள் குணமாகும். அனுமன் ஜெயந்தியன்று சன்னிதி முன் மண்டபம் முழுவதும் பழம், வடைகளால் அலங்காரம் செய்கின்றனர். தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்துாரக்காப்பு செய்யப்படும்.

திருவிழா

ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆடிப்பெருக்கு, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, ஆடி, தை அமாவாசை.

இருப்பிடம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் மலைக்கோட்டை. அதன் அடிவாரத்தில் கோவில்.

நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி.

அலைபேசி: 99767 90768.






      Dinamalar
      Follow us