sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 11

/

தலவிருட்சங்கள் - 11

தலவிருட்சங்கள் - 11

தலவிருட்சங்கள் - 11


ADDED : ஜூலை 30, 2023 05:47 PM

Google News

ADDED : ஜூலை 30, 2023 05:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாங்குநேரி தோத்தாத்ரிநாதர் - மாமரம்

நான்கு ஏரிகள் ஒன்றாகச் சந்திக்கும் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி. இங்கு மூலவராக இருப்பவர் சுயம்பு மூர்த்தியான தோத்தாத்ரிநாதர் என்னும் வானமாமலை பெருமாள். இங்கு பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு முனிவர், மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை, கருடாழ்வார் ஆகிய தெய்வங்களும் சுயம்பு மூர்த்தியாக உள்ளனர். ஆண்டு முழுவதும் இங்கு தரிசனம் செய்யலாம்.

தர்மவத்சலன் என்னும் வணிகர் தவறான வழிகளில் பொருள் சேர்த்தார். இதன் பயனாக தோல்நோயால் அவதிப்பட்டார். தீவினை தீர நாங்குநேரி தோத்தாத்ரி நாதரைச் சரணடைந்தார். இங்கு பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய்யை உடம்பில் தடவியும், மருந்தாக குடித்தும், தீர்த்தத்தில் நீராடியும் வழிபட்டார். தோல்நோயில் இருந்து விடுபட்டு உடலில் பொலிவு ஏற்பட்டது.

இதைப் போல இன்னொரு சம்பவமும் நடந்தது. வைத்தியநாதன் என்பவரின் கனவில் தோன்றிய சுவாமி, அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு தன்னுடைய திருநாமத்தை இட வேண்டும் எனக் கட்டளையிட்டார். ஆனால் அவரோ செய்யவில்லை. இளைஞரான பின் தோல் நோயால் அவதிப்பட்டார். இங்கு வழிபாடு செய்ய நோய் தீர்ந்தது. பெருமாளின் பெயர்களில் ஒன்றான 'தேவநாதன்' என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

சாம்பிராணி, பன்னீர், சந்தனம், இளநீர், 18 மூலிகைகள் கொண்ட சந்தனாதி தைலத்தால் தினமும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை சிறிய வாய்க்கால் வழியாக ஒரு கிணற்றில் சேமிக்கின்றனர். இந்த எண்ணெய்யே பிரசாதமாக தரப்படுகிறது. தினமும் மூன்று முறை உடம்பில் பூசியும், சிறிதளவு சாப்பிட்டும் வந்தால் தோல் நோய்கள் மறையும். மருந்து எண்ணெய் கோயிலில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்தலத்தின் பெருமையை, 'சேற்று நிலத்தில் செந்நெல் பயிர்களின் நடுவில் தாமரை மலரும் ஸ்ரீவர மங்கலநகரில் இருக்கும் தோத்தாத்திரி பெருமாளே' என நம்மாழ்வார் பாடியுள்ளார்.

இக்கோயிலின் தலவிருட்சம் பால் சத்து நிறைந்த மாமரம். மாங்கிபெரா இண்டிகா (Mangifera indica) என்னும் தாவரவியல் பெயரும், அனக்கார்டியேசியே குடும்பத்தை சார்ந்ததுமான இம்மரம் சுவையான பழங்களைத் தருகின்றன.

போகர் பாடிய பாடல்

மாமரத்தின் பேர்தனையே வழுத்தக்கேளு

மயலான கொக்குமாம் ஆமிரசூதம்

காமமா சீரிமான கண்டமதுரம்

கச்சுகங் காமாங் கச்சகாரம்

பாமரமாங் கப்புட்பம் கொத்துலதமாகும்

பழமான சக்கிரகா ராச்சுவதாகுந்

துாமரஞ் சுகபிச் சகமுமாகுஞ்

சூதமாம் விருட்சத்தின் சொல்லுமாமே.

கொக்கு, ஆமிர சூதம், சீரிமான், கண்டமதுரம், கச்சகாரம், பாமரம், சுகப்பிச்சம், சூதமாமிருட்சம், மாந்தபுட்பம் என மாமரத்திற்கு பல பெயர்கள் உண்டு.

அகத்தியர் பாடிய பாடல்

கவைவாத பித்த கபமருசி வாந்தி

சுவைமறுத்த மந்தமெனுந் தோடம்-

இவையெல்லாங்

காதத்துக் கப்புறம்போங் கான மடமயிலே!

சூதத்தின் புன்வடுவைத் துள்

மாம்பிஞ்சு வாதத்தை அதிகப்படுத்தினாலும் சுவையின்மை, வயிறு மந்தம் போக்கும்.

தாதுநட்டம் வாதந் தனிக்கிரந்தி யாம்பசிபோங்

காதுமுட்டப் பக்குவிடுங் காயமதில் - ஓதுகின்ற

பாங்காறாப் புண்வளரும் பறுகூசங்

சொற்குளறும்

மாங்காயுண் பாரை மறு.

மாங்காயை ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிடுவோருக்கு தோல் நோய்கள், ஆறாத புண்கள் தோன்றும். ஆனால் பசி கட்டுப்படும்.

பேகமே சீதப் பெருக்குஞ்சோ ரிக்கடுப்பும்

வீசுமோ மூலமுறு வெங்கொதிப்பு-மாசுடைய

பூங்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக்

கனியில்வந்த

மாங்கொட்டையைக் காணில் வாது.

மாங்கொட்டையை முறையாக சமைத்து சாப்பிட்டால் ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, மூலம், வயிற்றுவலி நீங்கும்.

சீதரத் தப்போக்கைச் சிக்கெனவே

தான்பிடிக்கும்

போதவயிற் றுக்கடுப்பைப் போக்குங்காண்-

ஓதுகின்ற

வாந்தியையும் தீர்க்குவெளி மாமரத்தின்

வேர்ப்பட்டை

பூந்துகின் மாதே புகல்.

மாமரப்பட்டையை கஷாயமிட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,

வாந்தி நீங்கும்.

பெரும்பாடெங் கேரத்தப் பேதியெங் கேமுக்கல்

தரும்பாழும் வெள்ளையெங்கே சாற்றாய்-

கரும்பாம்பின்

நாதநிரி யாசஞ்செய் நங்காய்!வனத்திலுறை

சூதநிரி யாசமெச் சொல்.

மாமரத்தின் பிசினை மோரில் கலந்து சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல் குணமாகும்.

எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 04635 - 250 119

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567

jeyavenkateshdrs@gmail.com






      Dinamalar
      Follow us