sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இதல்லவா பேரு!

/

இதல்லவா பேரு!

இதல்லவா பேரு!

இதல்லவா பேரு!


ADDED : நவ 26, 2012 11:39 AM

Google News

ADDED : நவ 26, 2012 11:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகப்பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால்,திருக்கார்த்திகை திருநாள் அவருக்கு விழா நாளாக அமைகிறது. இதையொட்டி, அவரது பெயர் குறித்த சிறப்பு தகவல்களைத் தெரிந்து கொள்வோமா!

ஆறுமுகமா! காலரை தூக்கி விடுங்க!

அவரை 'ஆறுமுகன்' என்கிறோம். ஆறுமுகம் என்று பெயருள்ளவர்கள் தங்களைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில், இந்தப்பெயரில் தெய்வீகம், அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை ஆகிய தன்மைகள் அடங்கி இருக்கிறது. ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, மரண அவஸ்தையில் தத்தளித்தாலோ 'ஆறுமுகா' என்றால் போதும். அவருக்கு நிவாரணம் கிடைக்கும். எமனின் கோர முகம் கண்முன் தெரியும்போது, 'ஆறுமுகா' என்றால், முருகனின் ஈரமுகம் ஆறும் தோன்றும் என்பது ஐதீகம்.

முருகன் என்னும் பண்டிதர்

முருகன் என்று பெயருள்ளவர்களும் தங்கள் பெயர் குறித்து பெருமை கொள்ளலாம். அந்தக்காலத்தில் தமிழாசிரியர்களை பண்டிதர் என்பர். வடமொழியில் இதை 'பண்டிட்' என்று குறிப்பிடுவர். பண்டிதர் என்றால் 'பெரிய படிப்பாளி'. இதற்கு 'பண்டா' என்பதே வேர்ச்சொல். 'பண்டா' என்றால் 'பரமஞானம்'. இதனால் தான் வடமாநில கோயில் பூஜாரிகளை 'பண்டா'

என்பர். முற்றும் அறிந்த ஞானம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. எனவே தான் முருகப்பெரமானை ஞானபண்டிதன் என்பர். இவர் பழநியில் வீற்றிருக்கிறார். திருப்புகழில் அருணகிரிநாதர் 'ஞானபண்டித ஸ்வாமீ நமோ நம' என்று முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். அவரை வழிபட்டோருக்கு ஞானம் உண்டாகும்.

கந்தன் என்றாலே துள்ளல் தான்!

ஸ்கந்தன் என்ற வடசொல்லே தமிழில் 'கந்தன்' எனப்படுகிறது. இச்சொல்லுக்கு 'துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர்' என்று பொருள். உலகத்தைக் காத்தருள வேண்டும் என்று துடிப்புடன் துள்ளி வந்ததால் இப்பெயர் உண்டானது. முருகனுக்கு, சுப்பிரமணியர், கார்த்திகேயர், சரவணர் என்று எத்தனையோ பெயர் உள்ளது. இருந்தாலும் அவரது வரலாறு சமஸ்கிருதத்தில் 'ஸ்காந்தபுராணம்' என்றும், தமிழில் 'கந்தபுராணம்' என்றும் தான் பெயர் பெற்றுள்ளது. அவருடைய இருப்பிடத்திற்கு 'ஸ்கந்தலோகம்' என்று பெயர். அருணகிரிநாதர் முருகனின் அருளைப் பெற்ற பின் பாடிய நூல் 'கந்தர் அனுபூதி'. முருகனுக்கு மூத்தவன் என்ற பொருளில் விநாயகருக்கும் 'ஸ்கந்தபூர்வஜர்' என்றொரு பெயருண்டு. முருகனின் பாடல்களில் கந்தசஷ்டி கவசம் சிறப்பானது. 'கந்தா' என்ற மந்திரம் சொல்லி வழிபட்டால், முருகன் துள்ளி வந்து அருள் செய்வார் என்பர்.

வேலாயுதம் என்றால் வெற்றி

தேர்வுக்குச் செல்கிறீர்கள். வேலைக்கு முயற்சிக்கிறீர்கள். தொழில் துவங்குகிறீர்கள். திருமணத்துக்கு நாள் குறிக்கிறீர்கள். அனைத்தும் வெற்றிகரமாய் நடந்து முடிய முருகனுக்குரிய 'வேல் வேல் வேல் வேலாயுதா' என்ற திருமந்திரத்தை உரக்க உச்சரிக்க வேண்டும். ஒருவன் கற்கும் கல்வி, வேலின் கூரிய நுனி போல கூர்மையான அறிவைத் தருவதாக இருக்க வேண்டும். அதன் கைப்பிடி ஆழ்ந்த சிந்தனை செய்து செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. நுனிக்கும், கைப்பிடிக்கும் இடையேயுள்ள விரிந்த பகுதி, பரந்து விரிந்த மனதைப் பெற வேண்டுமென்பதைக் காட்டுகிறது. கூரிய அறிவும், ஆழ்ந்த சிந்தனையும், பரந்த மனமும் இருந்தால் எந்த இலக்கையும் அடைந்து வெற்றி பெறலாம். இதனால் தான் முருகன், வேலை வெற்றி ஆயுதமாகக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us