sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மகிழ்ச்சி பொங்கும்

/

மகிழ்ச்சி பொங்கும்

மகிழ்ச்சி பொங்கும்

மகிழ்ச்சி பொங்கும்


ADDED : ஜூன் 22, 2023 11:38 AM

Google News

ADDED : ஜூன் 22, 2023 11:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிரித்த முகத்துடன் பழகு. மகிழ்ச்சி பொங்கும்.

* உனது வாழ்க்கை குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தர வேண்டும்.

* பெற்றோரை விட சிறந்தவர் இவ்வுலகில் யாருமில்லை.

* அன்பு, அறிவு என இரண்டும் அவை வெளிப்படும்போது மட்டுமே உணர முடியும்.

* பெரியவர்களை பார்த்தால் வணங்கு. முடியாவிட்டால் அவர்களை அலட்சியப்படுத்தாதே.

* ஞானிகளைப் பழித்தவன் மறுபிறப்பில் பித்தனாகப் பிறப்பான்.

* இந்த பிறவியில் செய்யும் நன்மைகளை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.

* யார் கைவிட்டாலும், நீ செய்த தர்மம் உன்னைக் கைவிடாது.

* பயிருக்கு முள் வேலியைப் போல், பணத்திற்கு தர்மம் வேலியாக இருக்கட்டும்.

* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதே.

* புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.

* எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. வெற்றி பெறுவாய்.

* நல்ல எண்ணங்கள் இருக்கும் மனமே கடவுளின் கோயில்.

* கடவுளை அன்பினால் வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே.

* மானம் காக்க ஆடையும், மனதைக் காக்க வழிபாடும் அவசியம்.

சொல்கிறார் வாரியார்






      Dinamalar
      Follow us