sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

படித்தால் மட்டும் போதுமா

/

படித்தால் மட்டும் போதுமா

படித்தால் மட்டும் போதுமா

படித்தால் மட்டும் போதுமா


ADDED : ஜன 16, 2020 05:42 PM

Google News

ADDED : ஜன 16, 2020 05:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* படித்தால் மட்டும் போதுமா...கடவுளின் திருவடிகளை வணங்காவிட்டால் படிப்பால் பயனில்லை.

* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் தவிர்ப்பது தர்மமாகும். தர்மத்தால் வாழ்வில் நல்ல நிலையை அடையலாம்.

* நம்மால் முடிந்த தர்மச் செயல்களை செய்தால், வாழ்வில் உயர்வு உண்டாகும்.

* தர்மத்தால் வரும் இன்பம் நிலையானது. மற்ற வழிகளில் வரும் இன்பங்கள் நிலையற்றவை.

* ஒருவன் தன் வாழ்நாளில் அறச்செயல்களில் ஈடுபட வேண்டும். மறந்தும் பழியை தரும் செயல்களில் ஈடுபடக் கூடாது.

* மனிதனின் எண்ணமே செயலாகிறது. அந்தச் செயலே வாழ்வை தீர்மானிக்கிறது.

* விருப்பும், வெறுப்பும் இல்லாத கடவுளின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் நேராது.

* கடவுளின் திருவடிகளை சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடந்து மோட்சம் அடைகின்றனர்.

* பக்தியின் முக்கிய நோக்கம் மனிதனை தர்மத்தின் பாதையில் செல்லத் துாண்டுவதே.

* பதவியும், பொருளும் புகழை உயர்த்தாது. ஒருவர் செய்த தர்மமே புகழை உயர்த்தும்.

* தர்ம வழியில் வாழ்பவர்களே ஞானிகள். கடவுளுக்கு நிகராக அவர்கள் மதிக்கப்படுவர்.

* அன்பும், தர்மமும் இணைந்தால் தான் குடும்ப வாழ்வே சிறக்கும்.

* தானம், விருந்தோம்பல், நட்பு பாராட்டுதல் ஆகியவையே தர்மத்தின் பண்புகளாகும்.

* உழைப்பின் மூலம் உடலுக்கான (வாழ்வதற்கான) சம்பளம் கிடைக்கும். அதுபோல, பிறர் மகிழ கொடுத்து உதவுதல், நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுதல் ஆகியவற்றால் ஆத்மாவுக்கு ஊதியம் கிடைக்கும்.

* பெற்ற தாயே பட்டினி கிடக்கும் சூழல் இருந்தாலும், மனிதன் தர்மத்தை மீறி நடப்பது கூடாது.

* அன்பும், பண்பும் நிறைந்த மனைவி அமைந்து விட்டால் இல்லாதது ஏதுமில்லை.

கேட்கிறார் திருவள்ளுவர்






      Dinamalar
      Follow us