sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

காத்தருளும் கந்தவேல்

/

காத்தருளும் கந்தவேல்

காத்தருளும் கந்தவேல்

காத்தருளும் கந்தவேல்


ADDED : அக் 29, 2010 04:18 PM

Google News

ADDED : அக் 29, 2010 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எவ்வளவு பெரிய இடைஞ்சலாக இருக்கட்டுமே! தெய்வங்களுக்கு எதிராக ஏதோ தவறு செய்து, அதனால்  ஏற்பட்ட பாவமாகக் கூட இருக்கட்டுமே! கந்தவேலிடம்  சரணடைந்து விட்டால் போதும்! அவர் நம்மைக் கருணையுடன் காத்தருள்வான்.

காஷ்யபர் என்ற முனிவருக்கு அதிதி என்ற மனைவியிடம் தோன்றியவர்கள் ஆதித்யர்கள் எனப்படும் தேவர்கள். திதி என்ற மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தைத்திரியர்கள் எனப்படும் அசுரர்கள். இவர்களுக்கு இடையே கடுமையாகச் சண்டை நடக்கும். தேவர்களுக்கு தெய்வங்களின் துணை இருந்ததால், அவர்கள் அசுரர்களைக் கொன்று குவித்தனர். ஒரு கட்டத்தில் அசுரர்களே இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதுகண்டு திதி தவித்தாள். ஆயிரக்கணக்கில் பிள்ளைகளைப் பெற்றும், ஒன்று கூட தங்கவில்லையென்றால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!

ஆனால், அவள் ஒரு சிறந்த தாயல்ல.

கணவனுடனும் அடிக்கடி கருத்து வேறுபாடு கொள்வாள். திதிக்கு பல குழந்தைகள் பிறந்தனர். அவர்களை தவவழியில் சென்று இறைவனை அடையுமாறு தந்தை காஷ்யபர் அறிவுறுத்தினார். தாய் திதியோ, ''அவர் கிடக்கிறார், நீங்கள் இந்த உலகத்தையே உங்கள் கைக்குள் கொண்டு வர வேண்டும். உலகெங்கும் அசுரக்கொடி பறக்க வேண்டும்,'' என்றாள். போதாக்குறைக்கு இவர்களுக்கு கிடைத்த குரு சுக்ராச்சாரியாரும் தூபம் போட்டார். சுக்கிரன் இன்பத்திற்கு அதிபதி. இன்பவாழ்வைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்ய வைப்பார்!  இது இயற்கை. அசுரக்குழந்தைகளுக்கும் அம்மா, ஆசானின் போதனைகள் மனதில் பதிந்து விட்டன. அப்பாவின் நற்போதனையை ஒதுக்கி விட்டனர். ஆனால், இதன் விளைவை அவர்கள் அனுபவித்தனர். தேவர்கள் ஒன்று கூடி, ஒரு அசுரர் கூட விடாமல் அழித்து விட்டனர். திதி அழுதாள். தனக்கு மேலும் குழந்தைகள் வேண்டும். வம்சம் தழைக்க வேண்டுமென தன் கணவர் காஷ்யபரிடம்

முறையிட்டாள்.

 ''புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தான் குழந்தைகள்

பிறக்கும்,'' என்ற காஷ்யபர் மனைவிக்காக யாகத்தைத் துவங்கினார். மிகக்கடுமையான அனுஷ்டானங் களுடன் யாகம் தொடங்கியது. 

''காஷ்யபர் சிறந்த மகரிஷி. அவரது யாகம் மட்டும் முற்றுப்பெற்று விட்டால், அசுர இனம் மீண்டும் தலை தூக்கி விடும். நாம் எப்படியேனும், அந்த யாகத்தை நிறுத்தியே ஆக வேண்டும்,'' என முடிவெடுத்தனர்.

இதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்து விட்டார் காஷ்யபர். அவருக்குத் தெரியும், யாரை அணுகினால் யாகம் வெற்றிகரமாக நடந்து முடியுமென்று!  யாகங்கள் சுபமாக முடிய @வண்டும் என்று காஷ்யபர் கந்தவேலை நினைத்தார். அவரது பிரார்த்தனை இதுதான். (யாகம் துவங்கும் ஒவ்வொருவரும் இந்த பிரார்த்தனையைச் சொல்லலாம்)

''யார் அக்னி வடிவாய்

இருக்கிறாரோ, யார் மேஷ (ஆடு) வாகனத்தில் அமர்ந்து வருகிறாரோ, அந்த மூர்த்தி அடியேனையும், யாகத்தையும் காத்தருள வேண்டும். 'சிவாக்கினி பூ' என்று வேதங்களால் அழைக்கப்படும் பொருளாய் இருப்பவர் யாரோ, குமரன் என்பவர் யாரோ, திரியம்பகன் என்பவர் யாரோ, அந்தக்கடவுள் என்னையும், யாகத்தையும் காத்தருள வேண்டும்,'' என்றார்.

உடனே முருகப்

பெருமான் வேலுடன் அங்கு தோன்றினார். ''காஷ்யபரே! கவலை வேண்டாம்! என்னை வணங்கியவர்

களின் யாகம் வெற்றிகர மாகத் திகழ எமது வேல் துணை நிற்கும்,'' என்று கூறி மறைந்தார்.

இதையடுத்து தேவர்கள் கலங்கினர். அவர்கள் இரண்டு அசுர சக்திகளை <உருவாக்கிய யாககுண்டத்தில் இருந்து வெளிப்படச் செய்தனர். காஷ்யபர் அவற்றைக் கண்டு நடுங்கினார். மீண்டும் முருகப்பெருமானை வணங்கினார்.

''ஞானசக்திதரா! பாலமுருகா! சரணம், சரணம்'' என்று கதறினார். அக்கணமே அங்கு தோன்றிய முருகப்பெருமான், அந்த அசுரர்களை அழித்தார். யாகம் வெற்றிகரமாக முடிந்தது. திதியும் கருவுற்றாள்.

தன்னை மனதார நம்பியவர்கள் யாராயினும் கைவிடமாட்டான் முருகன். அவன் வரும் முன்

அவனது கந்தவேல் நம் முன் வந்து பாதுகாப்பளிக்கும்.

 






      Dinamalar
      Follow us