ADDED : அக் 20, 2023 05:35 PM

அக்.24 ஸித்தி தினம்
* உலகம் என்ன நினைக்கிறது என கவலைப்படாதே. உனது உள்ளம் என்ன நினைக்கிறது என்பதை கவனி.
* அறிவால் கடவுளை அடைய முடியாது. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக உள்ளார்.
* பொறுமை, நம்பிக்கை என்னும் இரு காணிக்கைகளையே கடவுள் உன்னிடம் எதிர்பார்க்கிறார்.
* எளிமையாக வாழ விரும்பு. கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளை செய்யாதே.
* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.
* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்து.
* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம்.
* கடவுள் மீது முழு கவனம் செலுத்தினால் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிபவராக கடவுள் இருக்கிறார்.
* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த மனம் ஒன்றே போதும்.
* வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடவுளை வணங்கு.
* உன்னிடம் பணம் எவ்வளவு இருந்தாலும், நீ செய்த வினைகளின் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.
சொல்கிறார் ஷீரடி சாய்பாபா