sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இலக்கியப் பார்வை

/

இலக்கியப் பார்வை

இலக்கியப் பார்வை

இலக்கியப் பார்வை


ADDED : ஜன 15, 2011 01:24 AM

Google News

ADDED : ஜன 15, 2011 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும். நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சிவஞான முனிவர்

சிவஞான போத பேருரை என்னும் நூலை எழுதியவர் சிவஞான முனிவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்தார். பெற்றோர் ஆனந்தக்கூத்தர்- மயிலம்மை. இலக்கணம், இலக்கியம், மொழி பெயர்ப்பு, சமயம், புராணம், உரைகள் என அத்தனை வகை இலக்கியங்களையும் ஆக்கி அளித்தவர். அகிலாண்டேஸ்வரி பதிகம், கலசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், சோமேசர் முதுமொழி வெண்பா, திருத்தொண்டர் திருநாமக்கோவை, பஞ்சாக்கர தேசிகர் மாலை, சிவதத்துவ விவேகம், தருக்க சங்கிரக அன்னப்பட்டியம், காஞ்சிப்புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரை ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் என்று சிறப்பித்துக் கூறுவர். திருத்தணி கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், காஞ்சி சிதம்பரம் முனிவர் ஆகியோர் இவரது மாணவர்கள். சிவஞான போத சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை, தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தி, நன்னூல் விருத்தியுரை, கம்பராமாயண முதல் செய்யுள் சங்கோத்திர விருத்தி ஆகிய உரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

வீரராகவ முதலியார்

காஞ்சிபுரம் அருகிலுள்ள புதூர் கிராமத்தில் பிறந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். 'அந்தகம்' என்றால் 'பார்வையற்ற' என்று பொருள். இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர் என்பதால் 'அந்தகக்கவி' என்னும் அடைமொழியைப் பெற்றார். சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூர் உலா, திருக்கழுக்குன்ற மாலை, சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

நவீன கம்பர்

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருச்சியில் பிறந்தவர். இவர் திருவாவடுதுறை மடத்தில் புலவராக இருந்தார். தினமும் இவர் 300 பாடல்கள் பாடியதாகச் சொல்வர். 22 புராண நூல்கள், 10 பிள்ளைத்தமிழ் நூல்கள், பத்து அந்தாதிகள், இரண்டு கலம்பகம், ஏழு மாலை நூல்கள், மூன்று கோவை நூல்கள், ஒரு உலா மற்றும் லீலை நூல்களை எழுதியுள்ளார். இவரை 'நவீன கம்பர்' என்று பாராட்டுவார்கள்.






      Dinamalar
      Follow us