ADDED : ஜூன் 09, 2023 09:32 AM

* நல்ல செயல்களை செய்து, புண்ணியத்தை தேடிக்கொள்.
* நல்ல மனதுடன் இரு. மனிதர்களும் நல்லவர்களாகவே தோன்றுவர்.
* பிறருடன் அன்பாக நடந்துகொள். அதுதான் நல்ல குணம்.
* துன்பம் என்பது கடவுள் உனக்கு அளிக்கும் வாய்ப்பு.
* முயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்வில் உயரலாம்.
* நம்பிக்கையுடன் செயல்படு. முயற்சியில் வெற்றி பெறுவாய்.
* கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் உனக்கு செய்வார்.
* சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்பட்டால், மனதில் தீய எண்ணமே வராது.
* எப்போதும் பண விஷயத்தில் நம்பிக்கையுடன் இரு.
* கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. அவரை சரணடைந்தால் பாவம் தீரும்.
* 'போதும்' என்ற மனதுடன் இருந்தால், அமைதியான வாழ்க்கை உண்டு.
* பக்தி இருந்தால் முடியாத செயலையும் முடிக்க முடியும்.
* கோபப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது பெண்களுக்கு அழகு.
* மனம் கடவுளிடம் ஒன்றி விட்டால் நினைத்தது கைகூடும்.
* பிறர் மீது குற்றம் சொல்லாதே. மீறி சொன்னால் அதுவே உன் இயல்பாகிவிடும்.
* கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார்.
* மனம் என்பது மதம் பிடித்த யானை போன்றது. அதை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திரு.
சொல்கிறார் சாரதாதேவியார்

