sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எம். எஸ். சுப்புலட்சுமி

/

எம். எஸ். சுப்புலட்சுமி

எம். எஸ். சுப்புலட்சுமி

எம். எஸ். சுப்புலட்சுமி


ADDED : மார் 18, 2011 01:42 PM

Google News

ADDED : மார் 18, 2011 01:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கீத உலகில் இசையரசியாகத் திகழ்ந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. சங்கீத பிரியர்கள் மட்டுமல்லாமல் சாமான்யர்களையும் தன் குரல்வளத்தால் கட்டிப்போட்ட பெருமை இவருக்குண்டு. அதிகாலையில், சுப்ரபாதம் பாடி நம்மை துயில் எழுப்பும் அன்னையாய் ஒவ்வொருவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் இன்றும் நிறைந்திருக்கிறார் எம்.எஸ்.

சீனிவாசனை எழுப்பும் சுப்பு'லட்சுமி'

வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசகஸ்ர நாமம், பஜகோவிந்தம், வெங்கடேஸ்வர பஞ்சரத்னமாலா போன்ற எம்.எஸ்., பாடிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.'கவுசல்யா சுப்ரஜா' என்று தொடங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தை அதிகாலையில் கேட்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வீகம் கமழும். திருப்பதியில் எம்.எஸ்., பாடிய சுப்ரபாதத்தைக் கேட்டுக்கொண்டே சீனிவாசப் பெருமாள் துயில் எழுகிறார். விழித்துக் கொண்டேயிருக்கும் மதுரையில் பிறந்ததாலோ என்னவோ, எம்.எஸ்., 'திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி' யைத் தமிழிலும் பாடினார். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விஸ்வநாதர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆகியோர் மீதும் சுப்ரபாதம் பாடியுள்ளார். 'இவர் பாடிய 'குறையொன்றுமில்லை' பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை. இந்தப் பாடலை எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி. திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ்ஸுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் வெண்கலச்சிலை ஒன்றை திருப்பதியில் நிறுவியுள்ளது.

யாத்திரைத் தலமான தியேட்டர்

கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்து பாடிக் கலந்தவள் பக்தமீரா. இம்மீராவின் வரலாறு திரைப்படமாக தமிழ், இந்தியில் திரைபடமாக்கப்பட்டது. இதில் மீராவாக நடித்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. கண்ணன் லீலை புரிந்த பிருந்தாவனத்திலேயே காட்சிகள் படமாக்கப்பட்டன. தென்னாட்டில் உள்ள மதுரையில் பிறந்து, வட நாட்டில் இருக்கும் மதுராவில் பாடல்கள் பாடி, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஆன்மிகப்பாலமாக எம்.எஸ். சுப்புலட்சுமி விளங்கினார். இசையாலே கண்ணனோடு கலந்த மீராவாக வாழ்ந்து காட்டினார். கவிக்குயிலான சரோஜினி, இந்திப்படம் மீராவின் அறிமுக உரையில், '' எம். எஸ்.,ஸின் கவர்ந்திழுக்கும் குரலைக் கேட்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப்பெருக்கு எல்லோருக்கும் ஏற்படும் என்று நான் திடமாக நம்புகிறேன். இவர் மீராவாக நடிக்கவில்லை. மீராவே இவர் தான் என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்'' என்று குறிப்பிட்டார். மக்களின் வரவேற்பால் டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை என்று நகரங்களில் மீரா திரைப்படம் மாதக்கணக்கில் ஓடியது. 'திரையரங்குகள் யாத்திரைத்தலமாகி விட்டன. இசைப்பிரியர்களும் பக்தி உள்ளவர்களும் மீராவைத் தரிசனம் செய்ய கூடுகிறார்கள்,'' என்று இந்தி நாளிதழ்கள் விமர்சனம் செய்தன.

நள்ளிரவில் தயாரான பாடல்

1947 செப்டம்பரில் டில்லியில் நடைபெற இருக்கும் காந்திஜியின் பிறந்தநாள் விழாவில் எம்.எஸ்., கலந்து கொள்ளவேண்டும் டில்லி வானொலி நிலையத்தினர் கேட்டனர். சூழ்நிலை காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவர் பாடிய பாடல் கேசட் டில்லிக்கு அனுப்பப்பட்டது. காந்திஜி எதிர்பார்த்த 'ஹரி தும் ஹரோ ஜன கீ பீர்' (கடவுளே! நீ மக்கள் படும் மனத்துயரைப் போக்கிடுவாய்) என்ற பாடல் அக்கேசட்டில் இடம்பெறவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றாலும், நம் நாடு இந்தியா, பாகிஸ்தான் என்று இருநாடுகளாகப் பிரிந்து போனதை எண்ணி காந்திஜி கவலைப்பட்ட காலம் அது. அதனால், கவலை நீங்க காந்திஜி இப்பாடலைக் கேட்டு ஆறுதல் பெற விரும்பினார். உடனே, இரவோடு இரவாக சென்னை வானொலிநிலையம் சென்று மெட்டு அமைத்து அப்பாடலைப் பாடி பதிவு செய்து டில்லிக்கு அனுப்பினார். காந்திஜியும் அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தார். சிலநாட்களுக்குப்பின், எம்.எஸ்., தம் குடும்பத்துடன் டில்லி சென்று ஒருநாள் மாலைப்பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது காந்திஜி, 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டார்.






      Dinamalar
      Follow us