ADDED : பிப் 20, 2020 12:32 PM

பிப்.21 - ஸ்ரீ அன்னை பிறந்த நாள்
* 'வென்று விடுவோம்' என்று நம்புவதே வெற்றிக்கான மந்திரம்.
* உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவனே வாழ்வில் சாதிப்பான்.
* பிடித்தமான நற்செயலில் ஈடுபட்டால் மனச்சோர்வு ஏற்படாது.
* கடவுள் அருள் ஒன்றே நமக்கு கிடைக்கும் உண்மையான பெருஞ்செல்வம்.
* மனஅமைதி என்பது நமக்குள் தான் இருக்கிறது.
* அளவான பேச்சின் மூலம் எல்லையற்ற சக்தியை பெறலாம்.
* ஒழுக்கத்தை பின்பற்றினால் செயல்கள் அனைத்திலும் ஒழுங்கு ஏற்படும்.
* துன்பத்தை போக்கும் ஒரே ஆயுதம் தன்னம்பிக்கையே.
* பிறரை திருத்த எண்ணினால் முதலில் நாம் திருந்த வேண்டும்.
* தவறை உணர்வதே அதை தவிர்ப்பதற்கான முதல் படி.
* புறம் பேசுவது என்பது மனிதனை அழிவு பாதைக்கு வழிவகுக்கும்.
* பிறரின் செயலில் தலையிடாமல் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
* மனிதனுக்கு பொறுமை தான் பலம். கோபம் தான் பலவீனம்.
* எவன் ஒருவன் தற்புகழ்ச்சி கொள்கிறானோ அவனின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும்.
* தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்தால் அவர் என்றும் கைவிடுவதில்லை.
* மற்றவரின் குறையை காணாமல், அவரது நிறைகளை காணுங்கள்.
* கடவுளுக்கு தொண்டு செய்வதே சிறந்த மகிழ்ச்சி.
* துன்பங்களை கடவுளின் ஒப்படைத்தால் அவரே எல்லாம் பார்த்துக்கொள்வார்.
* செய்த தவறை உணர்பவர்களுக்கே கடவுளின் அருள் கிடைக்கும்.
* தியானம் ஒன்றே கடவுளை உணரச் செய்வதோடு நிம்மதியும் தரும்.
சொல்கிறார் ஸ்ரீ அன்னை