sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தாயின் அன்பும் ஆசியும் கிடைக்க...

/

தாயின் அன்பும் ஆசியும் கிடைக்க...

தாயின் அன்பும் ஆசியும் கிடைக்க...

தாயின் அன்பும் ஆசியும் கிடைக்க...


ADDED : ஜூன் 23, 2023 12:04 PM

Google News

ADDED : ஜூன் 23, 2023 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரள மாநிலம் மூணாறு மூலக்கடை பார்வதி கோயிலில் தாயன்புக்கு கட்டுப்பட்டு விநாயகரும் முருகனும் அம்மாவின் அருகிலேயே உள்ளனர். இங்கு வழிபடுவோருக்கு பெற்ற தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

பழங்காலத்தில் மூணாறு மலையைச் சேர்ந்த வேடர்கள் அம்பிகையை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் அந்த இடத்திலேயே பார்வதியம்மன் கோயில் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கியபடி இருக்கும் அம்மனின் கையில் திரிசூலமும், வாகனமாக சிங்கமும் உள்ளது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் நவக்கிரகம், சைவக் கருப்பசாமிக்கு சன்னதிகள் உள்ளன. வெள்ளி, ஞாயிறன்று நடக்கும் ராகுகால பூஜையில் பங்கேற்றால் நவக்கிரகதோஷம் விலகும். விருப்பம் நிறைவேறும். திருமணத்தடை நீங்கும்.

வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் மூணாறு முருகன் இந்த கோயிலுக்கு எழுந்தருள்கிறார். வைகாசி விசாகத்தன்று இங்கு வழிபட்ட பின்னரே மூணாறு முருகன் கோயிலுக்கு பால்குடங்களை பக்தர்கள் சுமப்பர். ஆடிப்பூரத்தன்று பார்வதி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும். அதை அடுத்து வரும் வெள்ளியன்று அம்மனுக்கு அணிவித்த வளையல்கள் பிரசாதமாக தரப்படும். இதை கன்னிப்பெண்கள் அணிந்தால் திருமணத்தடை விலகும். மணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். நவராத்திரியின் போது திருப்பதி பாலாஜி, குபேர லட்சுமி, சாகம்பரி கோலங்களில் பார்வதியம்மனை தரிசிக்கலாம்.

திருக்கார்த்திகை தீபத்திற்கு முதல்நாளன்று வேடர்களின் பாரம்பரிய முறையில் தேன், தினை மாவு படைத்து வழிபாடு செய்வர். அப்போது வேடர் தலைவரான ஊர்காணி நாட்டாமைக்கு பரிவட்டம் கட்டும் விழா நடக்கும்.

எப்படி செல்வது: மதுரையில் இருந்து தேனி 77 கி.மீ., தேனியில் இருந்து மூணாறு 84 கி.மீ.,

விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி நவராத்திரி, கந்தசஷ்டி, தைப்பூசம் பங்குனி உத்திரம்

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 94469 33612

அருகிலுள்ள தலம்: மூணாறு முருகன் கோயில் 1 கி.மீ.,

நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மதியம் 4:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 94474 70935






      Dinamalar
      Follow us